முடிவின் தொடக்கம் நீயே 💙 63

899 20 10
                                    

" மிஸ்டர் அஜய் கிருஷ்ணா எழுந்திரீங்க ப்ளிஸ் . நாங்க சாதாரண டாக்டர் எங்களோட முழு முயற்சி செஞ்சு எங்க பேஷண்டை காப்பாத்து முயற்சி பண்ணுவோம் . ஆனா அந்த பொண்ணு வாழணும்னு மனசுல ஆசை இருந்தா மட்டும் தான் பிழைக்க முடியும் . அந்த பொண்ணோட வில் பவரும் கடவுளும் மனசு வச்சா தான் இது நல்லபடியாக முடியும் . நீங்களும் வேண்டிக்கோங்க " என்று ஆபரேஷன் தியேட்டர் நுழைந்து விட்டார் .

" கேட்டீங்களா .. நல்லா கேட்டீங்களா அப்பா .. நல்லது பண்றதா நினைச்சு உங்க பையன் வாழ்க்கையே சீரழிச்சிட்டிங்க . அதே மாதிரி நானும் உங்க பேச்சை கேட்டு என் அம்முவை மனசளவுல ஒடச்சிட்டேன் . எந்த பையனுக்கு நீங்க நல்லது பண்ணனும் நினைச்சு ஒரு பொண்ணு கொலை பண்ண நினைச்சீங்களோ அந்த பொண்ணு காப்பாத்துன உயிரை தான் இது . அவ என் உலகம் ப்பா . அவ இல்லாம இப்போ நரக வேதனை அனுபவிச்சிட்டு இருக்கேன் . நீங்க சொன்னதை நம்பி நானும் அவளை என்னென்ன தெரியுமா பேசிட்டேன் . கண்டிப்பா அவ மன்னிக்கவே மாட்டா . அவளே போனதுக்கு அப்புறம் நான் மட்டும் இருந்து என்ன பண்ண போறேன் அவளுக்கு துணையே நானும் போயிடுவேன் அதைதானே நீங்க எதிர்பார்த்தது . உங்களை குத்தம் சொல்லி என்ன ஆக போகுது எல்லாம் என் தப்பு " என்று அஜய் கத்திக் கொண்டிருந்த நேரத்தில் ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்தார் ஒரு டாக்டர் ‌.

" இங்கே அஜய் யாரு " என்று கேட்டதும் பாய்ந்தோடி அவர் முன் வந்து நின்றவன் "என்ன ஆச்சு டாக்டர் என் அம்மு நல்லா இருக்காளா " என்றான் . " உங்க மனைவி உங்களை பார்க்கணும்னு சொல்றாங்க உள்ள வாங்க " என்று சொன்னதும் அடுத்த நொடி கதவை திறந்து உள்ளே ஓடினான் அஜய் . மருத்துவ உபகரணங்கள் சூழ கட்டிலில் படுத்திருந்த கயலை பார்த்தவனுக்கு அப்பொழுதே பாதி உயிர் போய்விட்டது . " அம்முஊஊ " என்று தனக்கே கேட்காத குரலில் அவளை அழைக்க அந்த சின்ன குரலையும் உணர்ந்து அரை கண் திறந்து பார்த்தாள் கயல் .

" அம்மு ... அம்மு ... நான் பேசுறது கேட்குது தானே " என்றதும் தலையை சிறிதாக ஆட்டியவள் உயிரை கையில் பிடித்து கொண்டு ஏதோ உதட்டசைவில் சொல்ல அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை . உடனே காதை அவள் வாயின் அருகில் கொண்டு சென்றவன் உன்னிப்பாக கவனிக்க " அது உங்க குழந்தைன்னு நம்பிக்கை வந்துட்டா " என்றாள் . நெஞ்சில் ஈட்டியை வந்து குத்திய வலியை உணர்ந்தவன் " நான் உன்னை சந்தேகபடலை . எனக்கு நிஜமா ஞாபகம் இல்லை டி . நான் வேலை படிக்கனும் பாக்கனும் பிஸ்னஸ் பண்ணனும்னு மோட்டிவேஷன்ல இருந்த நமக்கு எப்படி காதல் வந்துச்சு . அதுவும் கல்யாணம் ஆகி குழந்தை உருவாகும் அளவுக்குன்னு என் மேல குழப்பம் மட்டும் தான் ‌. அப்பவும் மனசுக்குள்ள உன்னை பாத்தா ஒரு இனம்புரியாத உணர்ச்சி வரும் . அது காதல்னு அப்போ புரியலை டி ‌. ஞாபகம் இல்லாத அப்பவும் பார்த்த நொடியில இருந்து உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன் . எப்படி ஒரு பொண்ணை பார்த்ததும் காதல் வரும் இல்லை இது அப்பா சொன்னது போல ஈர்ப்புன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு உன்னையும் வருந்தி நானும் கஷ்ட படுறோம் மா . நம்பலைனா இங்க பாரு அன்னைக்கு இது என் குழந்தையான்னு கேட்டேன்ல அப்போ எனக்கு நானே ஏற்படுத்திக்கிட்ட வலி . உன் கண்ணுல பாத்த வலி எனக்கு நரக வேதனையை கொடுத்துச்சு அதான் இப்படி பண்ணிட்டேன் " என்று கையில் சுடு வைத்துக் கொண்ட தழும்பை காட்டினான் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now