முடிவின் தொடக்கம் நீயே 💙 17

300 11 2
                                    

அஜய் தனது அறையை கந்தர்வகோலோகமாக மாற்றி தரையில் அப்படியே விழுந்து கிடந்தான் .. என்ன யோசித்தாலும் மனதில் இருந்த கோபம் மட்டும் போகவே இல்லை ... அவள் வேண்டும் ... எக்காரணம் கொண்டும் அவளை விட அவன் மனம் ஒத்துக் கொள்ளாது என்பதை அவன் எப்போதோ உணர்ந்திருந்தான்... முதல் முறையாகபார்த்த போது எழுந்த ஆசை இரண்டாம் முறை அவள் கண்ணில் பட்டதும் குறையாமல் மென்மேலும் ஏறிக் கொண்டுதான் சென்றது...

அவளை தன்னுள் புதைத்து வைத்து பாதுகாக்க துடிக்கிறான் ... ஆனால் அவள் அவனுக்கு போக்கு காட்டி தவிர்க்கிறாள் ... அவள் சாதாரணமாக இருந்தால் கூட அவனுக்கு இவ்வளவு கோபம் வராது போல ... ஆனால் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் அனைத்தும் சகித்து தானே இருக்க வேண்டும்... அவள் விஷயத்தில் மட்டும் எதற்கும் மாறவே மாட்டான் என்பதைப் போல் அவன் மனம் இருந்தது...

கயல் தன் இரு அண்ணன்களையும் சமாதானம் செய்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள் ... கயலின் அம்மா அவளிடம் ஏதாவது பிரச்சனைனா வந்து சொல்லு பாப்பா என்று கூற... கண்டிப்பா மா என்றவள் அப்பொழுதுதான் மனதின் ஓரத்தில் அஜையின் ஞாபகம் வந்தது .. திரும்பி தினேஷை பார்த்தாள் ... அவள் பார்வையின் அர்த்தத்தை ஓரளவு புரிந்து கொண்டவன் கண்களை மூடித் திறந்தான் ..

கௌதம் இருவரையும் கேள்வியாக பார்க்க .. அப்புறம் கூறுகிறேன் என்ற செய்கை செய்ததும்.. சரி என்றான் .. அனைவரும் உணவு உண்டதும் தினேஷ் அவன் இல்லத்திற்கு கிளம்பி விட ... கயல் தன்னை அறையில் வந்து சேர்ந்து விழுந்தால் ... பின்னாலே கௌதமும் வந்தான் .. அவனை என்ன என்பதை போல் பார்க்க அவளை கட்டில் ஓரத்தில் தள்ளியவன் அவள் அருகில் காலியாக இருந்த பக்கம் படுத்து கொண்டான் ...

தங்கை இன்று நடந்ததை நினைத்து பயத்தில் இருப்பாள் .. கண்டிப்பாக உறக்கம் வராமல் தவிப்பாள் என்று அவள் அருகில் வந்து அவன் படுத்ததும் மனதில் இருந்த பயத்தை மறத்து விட்டு அண்ணன் அருகில் இருக்கும் நிம்மதியில் அவளும் தூங்க துவங்கி விட்டாள் ... அடுத்த நாள் பரபரப்பாக கல்லூரிக்கு கிளம்ப தினேஷ் அவளை அழைத்துச் செல்ல வந்த போதும் கௌதம் தானே கல்லூரியில் விடுவதாய் கூற மூவருமாக கல்லூரி கிளம்பினார்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now