முடிவின் தொடக்கம் நீயே 💙 15

321 10 5
                                    

கயலுக்கு சந்துரு வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்ததை தினேஷ் மற்றும் கௌதமிடம் மறைக்க வேண்டும் என்று எண்ணம் இல்லை... ஆனால் அவள் தாய் கூற வேண்டாம் என்று சொல்லி இருந்ததால் அப்படியே இந்த விஷயத்தை விட்டு விட்டால் ... கண்டிப்பாக தன் அண்ணன் இந்த விடுமுறைக்கு வரும்போது எடுத்து சொல்லி புரிய வைக்கலாம் என்று நினைத்திருக்க அதற்குள் சந்துரு அவளது அண்ணனுக்கு போன் செய்து கூறியிருந்தான்...

சந்துருவின் தந்தை சங்கர் அலுவலகத்தில் தான் கயலின் தந்தை மோகன் வேலை செய்கிறார் .. முதலாளி என்ற மரியாதை அவருக்கு அதிகம் ... ஆனால் அவரின் புதல்வன் சந்துரு ஒரு மோசமானவன் பெண்கள் விஷயத்தில் கேடு கெட்டவன் என்று அனைவரும் அறிவர் .. ஆனால் தன் மகளை பெண் கேட்டு வருவார்கள் என்று கயிலின் தந்தை அறியவில்லை ...

ஏற்கனவே சந்துரு மற்றும் கௌதம் இருவருக்கும் சிறுவயதிலிருந்து சண்டை ஏற்படும் என்பதால் கயலின் தாய் நீ இந்த விஷயத்தை அவனிடம் கூற வேண்டாம் என்று சொல்லி இருக்க ... இப்பொழுது தங்கள் வீட்டில் உள்ளவர்களே அவளிடம் மறைத்து வைத்து போல ஆகிவிட்டது ... கௌதம் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளம்பி விட்டான் ஊருக்கு... கயல் தினேஷ் தன்னிடம் பேசாதே என்று கூறிவிட்டு சென்றதை நினைத்து அவன் போன திசையை பார்த்துக் கொண்டிருந்தால் ...

அவள் பின்பக்கம் அஜய் கோவத்தில் நின்றிருந்தான்... அண்ணன் தம்பியாக இருந்தாலும் கயலிடம் உரிமையாக யார் பேசினாலும் அவனுக்கு கோபம் வருகிறது... தினேஷ் மீது கூட அவனுக்கு அவ்வபோது கோபம் வரும் ... ஆனால் இன்று தன்னவளை ஒருவன் பெண் கேட்டு வந்துள்ளான் ... அவள் அண்ணனிடம் அவளை அடையாமல் விடமாட்டேன் என்று கூறுகிறான் ...

எப்படி இந்த விஷயத்தை அவள் தன்னிடம் கூறவில்லை என கோபத்தில் அவளை பார்த்துக் கொண்டிருக்க ... மதன் அஜையின் கரத்தை பிடித்து கண்களை மூடி திறந்து அமைதியாக இருக்கும்படி கூறினான்... கயலின் நண்பர்களுக்கு அவள் தங்களிடம் கூட மறந்துவிட்டாலே என்று மனத்தாங்கல் இருந்தது ... பிரபா லாவண்யா இருவரும் பள்ளியிலிருந்து இணைந்து படிப்பதால் சந்துரு அவ்வபோது அவளிடம் செய்யும் வம்புகளை பற்றி அவர்களிடம் கூறி வைத்துள்ளாள்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now