முடிவின் தொடக்கம் நீயே 💙 56

360 12 5
                                    

" நீங்க மறைந்தது எல்லாம் உங்களுக்கு முன்னாடியே ஞாபகம் வந்துட்டு தானே " என்று கயல் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர் . ஆனால் அஜய் மரம் போல மௌனமாக நின்றானே தவிர பதில் ஏதும் கூறவில்லை . " இத்தனை நாளா எதுவும் ஞாபகம் இல்லைன்னு சொல்லி நடிச்சிருக்கான் இவன் . எனக்கு அப்பவே தோணுச்சு உருகி உருகி காதலிச்சானே அவன் உள் மனசுக்குள்ள கயலை பத்தி எதுவும் தோணலையான்னு . இப்பதானே தெரியுது . இதுல மொத்த குடும்பமும் சேர்ந்து இவன் கூட நாடகம் ஆடுறீங்க " என்று தினேஷ் அஜயை அடிக்காத குறையாக சீற்றத்துடன் கேட்டான் .

" ஏன் தம்பி எல்லாம் ஞாபகம் வந்ததுக்கு அப்புறம் கூட என் பொண்ணை பத்தி புரிஞ்சிக்காம அவளை இப்படி வார்த்தையால சாகடிச்சிட்டிங்களே " மோகனும் தன் பங்கிற்கு ஆதங்கமாக கேட்டு வைத்தார் . " நீங்க பண்ணுனதெல்லாம் போதும் . எனக்கு என் புள்ளை உயிரோட கிடைச்சதே பெரிய புண்ணியம் தான் . ‌ இதுக்கு மேல நம்ம எதுவும் தெரிஞ்சுக்க வேணாம் . கயல் நீ வா நம்ம வீட்டுக்கு போகலாம் " என்று கீதா கையை பிடித்து இழுக்க " எனக்கு நிறைய கேட்க வேண்டியது இருக்குமா கொஞ்ச நேரம் இருங்க " என்றவள் அஜய் பார்த்தாள் .

இவன் ஏன் இத்தனையும் மறைக்க வேண்டும் என பிரபா குடும்பத்தினரும் அஜய் குடும்பத்தினரும் கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தனர் ." நீ மௌனமாய் இருந்த வரைக்கும் போதும் அஜய் . வாய் திறந்து எதுவா இருந்தாலும் பேசிடு . பாதி பிரச்சனை முடிஞ்சிடும் " என்று ராகுல் சொன்னதும் கண்ணை இறுக்கமாக மூடி திறந்தவன் " அம்மு சொன்ன மாதிரி எனக்கு ஞாபகம் வந்தது எல்லாம் உண்மைதான் " என்றான் .

ஏன் இத்தனை நாள் இதைப் பற்றி கூறவில்லை என்பதை போல் அனைவரும் பார்க்க " என்கிட்ட கயலை பத்தி ஒருத்தர் தப்பா சொன்னாங்க . அதுவும் எனக்கு ஆப்ரேஷன் பண்ணின அடுத்த நாள். அவளோட மொத்த குடும்பத்தையும் என்கிட்ட தப்பா சொன்னாங்க . என்னால எது உண்மை எது பொய்யின்னு அப்போ பிரிச்சு பாக்க முடியலை . பழசு எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை ‌. நான் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கும் போதெல்லாம் என்கிட்ட தப்பு தப்பா பேசி இவளை தப்பாவே காட்டினாங்க . ஆனால் என் அம்மு நான் எவ்வளவு அவளை வெறுத்தாலும் வார்த்தைகளை சுட்டாலும் நான் தான் வேணும்னு என் கூடவே நின்னா . அவளை ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் மனசு ஏதோ பண்ணும் " .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Opowieści tętniące życiem. Odkryj je teraz