முடிவின் தொடக்கம் நீயே 💙 41

340 14 4
                                    

"எதுக்காக அஜய் இப்படி சொல்றீங்க அது நம்ம பாப்பா" என்று முடிந்தவரை அவனுக்கு சொல்லி புரிய வைக்கலாம் என நினைத்தாள் கயல்விழி . " எனக்கு எந்த பாப்பாவும் வேண்டாம் நீ போதும் அம்மு இனிமே இவ்வளவு நேரம் தூங்காத . நீ கீழே விழுந்ததும் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா நான். உன் கிட்ட கோபப்படாம சமத்தா தானே இருக்கேன் இனிமே இப்படி பண்ணாத " என்று அவள் கழுத்தில் முகம் வைத்து தேய்த்துக் கொண்டே பேச அவனை விலக்க முடியாமல் தவித்தாள் கயல்.

உடனே அங்கிருந்த மற்ற அனைவரும் சூழ்நிலை புரிந்து வெளியே வர "நாம எப்படி முதல்ல ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தோம் "என்று புரியாமல் கேட்டாள் கயல். " நீ கீழே விழுந்ததும் நான் உன்னை தூக்கி அங்க இருந்த கட்டில்ல படுக்க வெச்சேன் . அப்புறம் உனக்கு ஊசி எல்லாம் போட்டாங்க . அங்க ஒருத்தவன் எப்போதும் இருப்பானே" என்று மதனை குறிப்பிட்டவன் " அவன்தான் வீட்டுக்கு போகலாம்னு சொன்னான். அதான் உன்னை தூக்கிக்கிட்டு வந்துட்டேன். எல்லாரும் உன்னை பார்த்து பார்த்து பேசுறாங்க. உனக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா. நீ வயித்துல கை வச்சுக்கிட்டு அழுதியே ரொம்ப வயிறு வலிக்குதா அம்மு" என்று பாவமாக கேட்பவனிடம் என்ன கூறுவது என்று தெரியவில்லை அவளுக்கு.

"நமக்கு பாப்பா வரப்போகுது நாம தான் அந்த பாப்பாவை பத்திரமா பாத்துக்கணும்" என்று கயல் கூறியதும் புரியாத பாஷை பேசியதை போல் விழித்தவன் "நாம ஏன் அந்த பாப்பாவை பார்த்துக்கணும் . நீ என்னை மட்டும் பார்த்துக்கோ "என்று தன் குழந்தையிடம் கூட உரிமைப் போராட்டம் நடத்துபவனிடம் பேசி புரிய வைக்க முயற்சித்தாள்.

"இல்ல அஜய் புரிஞ்சுக்கோங்க . நம்ம வீட்ல ஒரு குட்டி தம்பி இருக்கான்ல " என ராகுல் மகன் ஆத்விக்கை குறிப்பிட்டு சொல்ல அஜய் முகத்தை திருப்பிக் கொண்டான் . ஆத்விக் அஜய்க்கு உடல் நிலை சரியில்லை என்றதும் பாட்டி தாத்தா வீட்டில் விட்டு விட்டார்கள் . கயல் வந்ததும் விடுமுறைக்கு மட்டும் அவனை இங்கு அழைத்து வந்தான் மதன் . அந்த சிறுவனிடம் நெருங்கி அமர்ந்து பேசி கொஞ்சினாள் அவளின் செல்ல குழந்தைக்கு கோபம் வந்துவிடும் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 حيث تعيش القصص. اكتشف الآن