முடிவின் தொடக்கம் நீயே 💙 51

336 13 2
                                    

அஜய் கயல்விழியை அழைக்க வந்திருக்க அவள் வீட்டிலிருந்த அனைவரும் அவனுடன் அனுப்ப மனமில்லாமல் தடுத்து விட்டனர் . ஆனால் யார் பேசுவதையும் கேட்காமல் கயல்விழி அஜையுடன் செல்வதாக கூறியவள் மற்றவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் அவன் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டாள் .
" என்ன நெனச்சுக்கிட்டு இருக்கா அவ . அவன் கூட இருந்தா அவளோட உயிருக்கும் குழந்தை உயிருக்கும் உத்திரவாதமே இல்லை . இந்த மாதிரி ஒரு சைக்கோவை கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்பட தான் அங்க அனுப்பி வச்சோமா . இந்த சந்தேக படுறவேன் இன்னும் என்ன வேணும்னாலும் பண்ணுவான் . எனக்கு இதுல விருப்பமே இல்லை " என்று கத்திக் கொண்டிருந்தான் கௌதம் .

" கயல் எது செஞ்சாலும் ஒரு நியாயம் இருக்கும். நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க . அத்தை மாமா எது நடந்தாலும் கயல் நம்ம பொண்ணு அவ வாழ்க்கையில எந்த முடிவு எடுத்தாலும் அதை நம்ம ஏத்துக்கணும் . ஒரு வேலை தப்பா இருந்தா நாம எடுத்து சொல்லி புரிய வைப்போம் . ஆனா இது புருஷன் பொண்டாட்டி பிரச்சினை . அன்னைக்கு திட்டினவரு இன்னைக்கு கூட்டிட்டு போக வந்து இருக்காரு . கயலும் ஒரு வார்த்தை கூட நம்ம கிட்ட பிரச்சனையை பத்தி சொல்லவே இல்ல . அப்பவே நீங்க புரிஞ்சுக்கணும் . அவங்களே பிரச்சனையை பேசி தீர்த்துக்க முயற்சி பண்றாங்க . இடையில நம்ம போய் வீணா சண்டைய பெருசாக்க வேண்டாம் " என்று சௌந்தர்யா கூறினாள் .

" நீ சொல்றதுல நியாயம் இருக்கிறதால கேட்டுக்குறோம் மா . ஆனால் இன்னும் ஒரு பிரச்சனை வந்தா கூட கண்டிப்பா அவளை நாங்க அங்க அனுப்ப மாட்டோம் . இது உறுதி " என்றார் மோகன் . கீதா மருமகள் கூறியதை ஏற்றுக் கொண்டாலும் மகள் அங்கு என்னென்ன இன்னல்களை சந்திக்கப் போகிறாளோ என வேதனையுடன் அமர்ந்திருந்தார் . சமயம் கிடைத்தால் அஜயை பதம் பார்த்து விடும் நோக்கில் தான் தினேஷ் . அன்று என்னென்ன பேச்சு பேசி விட்டான் தனது தங்கையை என்று கோபம் உள்ளுக்குள் இருந்து கொண்டே தான் இருந்தது
அவனுக்கு .

இங்கு கயல்விழியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் அஜய் . காரில் வரும் போது இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை . ஏன் கயல் அவன் முகத்தை ஒரு முறை கூட காணவில்லை . அஜய் பலமுறை அவள் ஏதாவது தன்னிடம் பேசுவாளா அல்லது சண்டையிடுவாளா என திரும்பி திரும்பி பார்த்தான் . ஆனால் பலன் என்னமோ பூஜ்ஜியம் தான் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now