முடிவின் தொடக்கம் நீயே 💙 33

451 12 1
                                    

எத்தனை பெரிய துன்பம் வந்தாலும் உனக்காக தாங்கிக் கொள்வேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவன் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டால் கயல்விழி... இன்று முதல் அவள் கயல் விழி அஜய் கிருஷ்ணா ... அவள் பூமுகத்தை பார்த்து அஜய் காதலுடன் புன்னகை செய்ததும் வெட்கத்தில் தலையை கவிழ்த்துக் கொண்டால்... மற்றவர்கள் எது கூறினாலும் அவன் செய்யவில்லை.. கயல் ஒவ்வொரு சடங்கிற்கும் அதை செய் இதை எடு என்று கூற அதை அப்படியே அச்சு பிசிறாமல் செய்து முடித்தான் அஜய்...

மற்ற அனைவரின் முகத்திலும் ஆச்சரியம் தான்... இந்த சின்ன பெண்ணிற்கு அவன் கட்டுப்படுகிறானே.. அத்தனை காதலா அவள் மீது என்று கீதா மோகன் இருவருக்கும் கூட ஆச்சரியம் தான்.. இருந்தாலும் தன் மகளின் வாழ்க்கைக்கு இது சரிப்பட்டு வருமா என்றுதான் நினைத்தனர் ... அடுத்தவர் குடும்பத்தில் இது போல் நடந்தால் அவர்களுக்காக பரிதாபப்பட முடியும்.. ஆனால் தன் குடும்பத்தில் நடந்தால் தானே வலியும் வேதனையும் புரியும் என்பதை போல தான் இருந்தது அவர்கள் நிலை...

கௌதம் அவர்களை பேசிப்பேசி சமாதானம் படுத்திருந்தாலும் முழு மனதுடன் அவர்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. மகளின் கண்ணீருக்கு முன் அந்த தந்தைக்கு வேறு எதுவும் தெரியவில்லை என்பதே உண்மை.. அனைத்து சடங்குகளும் முடிந்ததும் மணமக்களை நல்ல நேரத்தில் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அஜய் குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.. கயல்விழி அனைவருக்கும் கண்ணீருடன் விடை கொடுத்துவிட்டு காரில் ஏறினால்...

சௌந்தர்யா கலங்கிய கௌதமின் கண்களை பார்த்து அவள் கரத்தை அவன் கரங்களுடன் இணைத்துக் கொண்டால்.. தினேஷ் அவன் தோல்களில் கண்ணை துடைத்து துடைத்து ஈரமாக்கி வைத்திருந்தான்... அனைவருக்கும் கயல்விழி இருந்த கார் கிளம்பியதும் கோயிலில் இருந்து கிளம்பினார்கள்... நேற்று வரை தங்கள் வீட்டில் இருந்த பெண் திருமணம் முடிந்து போவாள் என்று யாரும் நினைக்கவில்லை ... உண்மை கசக்கத்தானே செய்யும் என்ற நிதர்சனத்துடன் தங்களின் வீட்டிற்கு கிளம்பினர் ...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Место, где живут истории. Откройте их для себя