முடிவின் தொடக்கம் நீயே 💙 40

298 10 2
                                    

கயல் எழுந்ததிலிருந்து அஜய் அவள் பக்கமிருந்து சிறிதும் நகரவில்லை . அவளிடம் என்ன நடந்தது என்று மேலோட்டமாக கேட்கலாம் என்று கௌரி பூர்வி இருவரும் நினைக்க அவனோ நூல் அளவு இடைவேளை இன்றி அவளிடம் எதுவோ பேசிக் கொண்டிருந்தான் . அனைத்திற்கும் புன்னகை முகமாக பதில் கூறினாள் கயல்.

பொறுமை கடந்து விட பூர்வி கயலிடம் " என்ன நடந்துச்சு கயல் . நீ ஏதாவது கொஞ்சமா சொன்னாதான் எங்களுக்கும் தெரியும்.‌ இவனை குணப்படுத்துரேன்னு நீ உன் வாழ்க்கையை நாசம் பண்ணிக்காத . அவனுக்கு சரியானதும் இதெல்லாம் தெரிஞ்சா இன்னுமும் கஷ்டப்படுவான் உனக்கு தெரியும் தானே " கடுமையாக கேட்டாள். "எனக்கு எல்லாமே புரியுது அக்கா . ஆனா கேட்கிற நிலைமையில அவர் இல்லை " என்றதும் அவன் கோபத்தில் செய்துள்ளான் என்பதை உணர்ந்து கொண்டாள் பூர்வி.

" நீ எங்களை கூப்பிட்டு சொல்லி இருக்கலாமே . அப்ப சீக்கிரமா வந்து பாத்துருப்போமே " மனம் தாங்காமல் சொன்னாள் கௌரி . கணவன் மனைவி ரகசியமே ஆனாலும் இது அதையும் தாண்டியது அல்லவா . மறுப்பாக தலையசைத்தவள் "அந்த நிமிஷத்துல அவரை விட்டு ஒரு அடி தள்ளி கூட வர முடியாது " மெல்லிய குரலில் கூறினாள் கயல் . அஜய் அவள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தான். யாரைப் பற்றி பேசுகிறார்கள் என்றெல்லாம் புரியவில்லை .

அவனுக்கு புரிந்தது கயல்விழி ஏற்கனவே உடல்நலம் சரி இல்லாமல் இருக்கிறாள் . அதனால் அமைதியாக இருக்க வேண்டும் என உள்ளுணர்வு கூற அமைதியாக அமர்ந்திருந்தான் . " உன்னால தான் எல்லாம் வந்துச்சு . இனிமே கயல் கிட்ட எப்படி நடந்துக்கிட்டா கயல் உடம்பு சரியில்லாமல் தான் போவா . அவளுக்கு திரும்ப உடம்பு சரியில்லாம போனா உன் கூட அவளை இருக்க விடமாட்டேன் " பூர்வி அஜய்யிடம் சற்று காட்டமாகவே கூறினாள்.

" என்னோட அம்முவுக்கு இது மாதிரி ஆகாது நான் பத்திரமா பாத்துப்பேன் " என்று அவள் கையை தன் நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டான் . 'உன்னால தாண்டா அவ இப்படி இருக்கா ' என்று நினைத்தாலும் வெளியில எதுவும் கூறாமல் "கவனமாய் இரு கயலு " என்று அஜயை கண்காட்டி சென்றாள் கௌரி . "அவளுக்கு ரொம்ப முடியலன்னா என்ன வந்து கூப்பிடனும் சரியா " என்று அஜையிடம் சொல்ல சரி என தலையை செய்தவன் கயலுக்கு அருகில் படுத்துக் கொண்டான்.

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now