முடிவின் தொடக்கம் நீயே 💙 20

338 11 5
                                    

அஜய் நிறுவனத்தின் பெயர் பலகையை பார்த்ததுமே மதனை கூட்டி காட்டினான்... அவனும் அஜையும் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டனர் ... என் டா படுபாவி அந்த சாதனா உன்கிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசினாலே அப்பவே எந்த கம்பெனிக்கு போறேன்னு கேட்டு வச்சிருக்க வேண்டியது தானே ... கடைசியில் என்னை எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா என்று மதன் கிசுகிசுப்பாக கேட்க... அவ இந்த கம்பெனியை செலக்ட் பண்ணுவான்னு எனக்கு எப்படி டா தெரியும் ...நானும் உங்க கூட தானே இருந்தேன் என்றான் அஜய் எரிச்சலுடன்...

உங்க அப்பா தெரிஞ்சி பண்ணுறாரா தெரியாம பண்ணுறாரா எனக்கு சுத்தமா புரியல ... ஆனா நல்லா வச்சு செய்றாரு என்று நினைத்த மதன் அனைவரும் உள்ளே செல்வதை பார்த்து அஜையை இழுத்து கொண்டு இடையில் கலந்த படி சென்றான் ... அனைத்து மாணவர்களையும் செக் செய்து உள்ளே அனுப்பினர் ... கொரோனா பரவும் காலம் என்பதால் முகத்தில் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க இவர்கள் இருவரையும் யாராலும் சட்டென அடையாளம் காண முடியவில்லை...

மிகப் பெரிய மென்பொருள் உற்பத்தி தொழிற்சாலை அது ... அனைத்து மென்பொருட்களும் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை ஒருவர் விளக்கிக் கொண்டிருக்க அஜய் மதன் இருவரும் திக் திக் நிமிடங்களுடன் தங்கள் நேரத்தை எப்படியாவது கடத்தி விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார்கள் ... அதோ இன்று படுமோசமாக மெதுவாக சுழன்று கொண்டிருந்தது ...

கயல் பிரபா லாவண்யா பாலாஜி வினோத் அனைவரும் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டு தினேஷையும் அழைக்க ... இவர்கள் கூட்டணியே சரியில்லையே என்று அவர்களை அடக்குவதற்காக அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டான் தினேஷ் ... அங்கு உற்பத்தி செய்யும் பொருட்களை விளக்கிக் கொண்டிருக்க இவர்களோ தாங்கள் கொண்டுவந்த ஸ்நாக்ஸ்களை காலி செய்து கொண்டிருந்தனர் ....

என்ன இருந்தாலும் மெதுவடை மெதுவடை தாண்டா என்று வினோத் கூறியதும் .. அங்கு என்ன சத்தம் என்றார் லட்சுமி ... ஒன்னும் இல்ல மேடம் இந்த கம்ப்யூட்டரில் என்னென்ன பார்ட்ஸ் யூஸ் பண்றாங்கன்னு பிரபாக்கு டவுட்டாம்... அதான் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன் என்று அவன் கூறியதும் அவனை நம்பாத பார்த்தவர் ... இங்கு எதுவும் கூற முடியாததால் சிட் டவுன் என்று அவனை எச்சரிக்கும் விதமாக கூறி சென்று விட்டார் ...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now