முடிவின் தொடக்கம் நீயே 💙 61

385 13 2
                                    

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது . வீட்டிலே அடைந்து கிடந்தாள் கயல் . சௌந்தர்யா அவளின் சக தோழியாக மாறி போனாள் .
தினேஷ் கௌதம் இருவரும் தங்கள் கண் போல தங்கையை பார்த்து கொண்டனர் ‌ . மோகன் கீதா சொல்லவே வேண்டாம் அவளை விட்டு இம்மி அளவும் நகரவே இல்லை . இருந்தும் கயல்விழி மிகவும் வெறுமையாக காணப்பட்டாள் .

அவளை வருத்த கூடாது என்பதற்காகவே அஜய் பற்றிய பேச்சை முற்றிலும் தவிர்த்தனர் . ஆனால் அவன் தானே அவள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறான் . " கயலு நாளைக்கு பாண்டி அண்ணன் கடைக்கு போவோமா . புதுசா வடை ஒன்னு போடுறாரு சம்ம டேஸ்ட் . உனக்கு புடிச்ச சமோசா கூட இருக்கு " என்று வினோத் சொல்ல " அட மில்க் ஷேக் மறந்துட்டியே டா " என்று எடுத்துக் கொடுத்தான் பாலா .

" அவளை மட்டும் கூட்டிட்டு போகலாம்னு எண்ணமா . தடியனுங்களா என்னை மறந்துட்டீங்களா " என்று உள்ளே வந்தாள் பிரபா . மாலை ஆகிவிட்டால் மூவரும் தோழியை காண வந்து விடுவார்கள் . இன்று ஏனோ அவளை வெளியே அழைத்து செல்லலாம் என்று நினைக்க அவளோ மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள் . " பாப்பா அவனுங்க தான் இவ்வளவு கெஞ்சுறாங்கல போயிட்டு வா " என்று கௌதம் சொல்ல அரை மனதுடன் கிளம்பினாள் .

" மாச கடைசி டி பர்ஸை காலி பண்ணிடாத " என்று பாலா புலம்ப " நான் பே பண்ணுறேன் நீ ஆர்டர் பண்ணு நாயே " என்றாள் பிரபா . " என்னதுஊஊ " என்று நண்பர்கள் மூவரும் அதிர்ந்தனர் . காரணம் கல்லூரி காலத்திலேயே பர்ஸ் வைத்திராத ஒரே ஜீவன் இப்போது பணத்தை செலுத்துவதாக கூறியதும் கரண்ட் ஷாக் அடித்த குறை தான் . " எப்படி டி " கயல் அதே அதிர்ச்சியில் கேட்க " மதனை நம்பினோர் கை விடப் படார் " என மதன் கிரடிட் கார்டை தூக்கி காட்டினாள் .

நால்வரும் சிரித்த படி உணவை உண்ண அதை ஏக்கமாக ஒளிந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் அஜய் . சரியாக சவரம் செய்ய படாத முகமும் கண்ணுக்கு கீழ் கருவளையத்துடன் உடல் இளைத்து காணப்பட்டான் . வீட்டில் யாரிடமும் பேச்சு வார்த்தை இல்லை . உணவு உண்பதும் இல்லை . நடைபிணமாக மாறி விட்டான் . கயல் அடம்பிடித்தால் கூட காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி கூட்டி சென்றிருப்பான் . தன்னை கண்டால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்பவளிடம் என்ன சொல்வது என்றே அவளை காண செல்ல வில்லை . இன்று எப்படியோ அவள் நண்பர்களை வைத்து பார்த்து விட்டான் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now