முடிவின் தொடக்கம் நீயே 💙 4

435 19 0
                                    

தினேஷ் கயல்விழியிடம் என்ன ஆகிவிட்டது என்று கேட்டாலும் அவள் பதில் கூறவில்லை... ஏதாவது உடம்பு சரியில்லை டி உண்மையை சொல்லு உங்க அண்ணன் வந்தா என்ன வெளுத்துடுவான்... அவன் தங்கச்சி கூட சரியா பாத்துக்கலன்னு .. கீழே விழுந்துட்டியா கை கால்ல அடியா என்று கை காலை சோதித்து பார்த்தான் பதட்டமாக..

ஒன்னும் இல்ல வயிறு வலிக்குது வீட்டுக்கு போகுமா என்று முகம் சுருக்க... அவள் அவஸ்தை புரிந்து கொண்டவன் ஒரு நிமிஷம் இரு என்று நண்பர்களிடம் சென்று நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று பையை எடுத்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு சென்றான்... அஜய்க்கு பொறுக்க முடியவில்லை தொட்டு பேசுவது இப்பொழுது வகுப்பை புறக்கணித்துவிட்டு அவனுடன் அப்படி எங்கு செல்கிறாள் என்று புரியாமல் போக மதனின் கையை உதறிவிட்டு அவர்கள் பின்னே சென்றான்...

கவின் சுனில் இருவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழிக்க மதன் அஜய் பின்னே ஓடினான்... கயல் தினேஷின் வண்டியில் செல்ல அஜய் வண்டியை கிளப்பும் முன் மதன் அவன் வண்டியில் ஏறி விட்டான் ...அவர்கள் இருவரையும் சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்... கயல் வயிறு வலி பொறுக்க முடியாமல் அவன் முதுகில் சாய்ந்து கொள்ள ஏதோ காதலர்கள் போலவே தோன்றியது அஜய்க்கு ...

இருந்தும் அவர்களை பின் தொடர்ந்து சென்றான்... ஒரு வீட்டின் முன் வண்டியை நிறுத்திவிட்டு அவளை அழைத்துச் செல்ல அவன் என்ன அந்த பொண்ணு வீட்டுக்கு கூட்டிட்டு போறான் என்று பல்லை கடித்தபடி மதனிடம் கர்ஜித்தான்... டேய் கொஞ்ச நேரம் சும்மா இரு என்று அவனை அமைதிப்படுத்தி விட்டு அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஒட்டி யாருக்கும் தெரியாமல் நின்று கொண்டான்...

அம்மா கதவ தொற என்று தினேஷ் வாசலில் நின்று கத்த இதோ வந்துட்டேன்டா... இந்த நேரத்திலே என்ன இங்க... கயல் குட்டி என்ன ஆச்சு பாதியிலேயே வந்துட்ட என்று தினேஷின் தாய் கேட்க... கதவை திறந்து எங்க ரெண்டு பேரையும் உள்ள அழிச்சிட்டு அப்புறம் பேசு அவளுக்கு உடம்பு முடியலை என்று அவளை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now