முடிவின் தொடக்கம் நீயே 💙 59

325 14 2
                                    

" தப்பு செஞ்சிட்டு மன்னிப்பு கேட்டா செஞ்சது இல்லைன்னு ஆகிடுமா . சட்டுன்னு மறக்க முடியுமா " அழுகையுடன் கேட்ட கயலை மேலும் தன்னுடன் அணைத்து பிடித்து கொண்டு " நான் மன்னிக்க சொல்லலை டி . கூடவே இருந்து தண்டனை கொடு " என்றான் அஜய் . " நான் கூடவே இருந்தா தண்டனையா உங்களுக்கு " அவனிடம் இருந்து தள்ளி சென்று கோபமாக கயல் கேட்க " ஏன் டி எது சொன்னாலும் தப்பா புரிஞ்சிக்கிற " இயலாமையுடன் கேட்டான் அஜய் .

" நீங்க சொன்னா எல்லாமே நல்ல வார்த்தை . அதுவே நான் சொன்னா தப்பு . உங்க நியாயம் தர்மம் இங்க செல்லுபடியாகாது . உங்களுக்காக என்ன என்னமோ பண்ணினாலே மீரா . போய் அவளை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருங்க " என்று அவனை வெளியே தள்ளி கதவை சாற்றி விட்டாள் . அவள் தள்ளும் அளவு அஜய் பலமில்லாமல் இல்லை . கயலும் ஒன்றும் அவ்வளவு பலசாலியும் இல்லை . ஆனால் அவள் முன் தன்னை தளர்வாக காட்டிக் கொண்டான் .

" என்ன மாப்பிள்ளை தங்கச்சி வெளிய தள்ளிட்டாளா " காபியை குடித்து கொண்டே நக்கலாக மதன் கேட்க " இது என்னோட மாமியார் வீடு . நீ மாப்பிள்ளை போல மிடுக்கா உட்கார்ந்து காபி குடிக்கிற . என்னை ஒரு ஆள் கூட கண்டுக்கல டா " கடுப்புடன் சோகமாக அவன் அருகில் அமர்ந்தான் அஜய் . " டேய் நான் புது மாப்பிள்ளை . அதுவும் இல்லாம நீ பண்ணின காரியத்துக்கு உனக்கு வேஷத்தை போட்டு காபி கொடுப்பாங்க . பரவாயில்லனா கேட்டு வாங்கி குடி " என்றான் மீண்டும் அதே நக்கல் குரலில் .

" இரு டி உன்னை எப்படி அடக்குறதுன்னு எனக்கு தெரியும் . ஆனா இப்போ நானே கிழிஞ்ச தாள் போல கிடக்குறேன் . சோ உன்னை அப்புறம் பாத்துக்கிறேன் " என்றான் பற்களை நற நறவென கடித்தபடி . " என்னை அட்டாக் பண்ணுறது மட்டும் சரியா பண்ணு . இதுல உன்னோட சட்டை பேண்ட் இருக்கு . குளிச்சிட்டு போய் உன்னோட மச்சான் மாமனாரை பாத்து பேசி கரக்ட் பண்ணு . இல்லை பாயாசம் தான் டி மாப்பிள்ளை " என்று சிரித்தான் மதன் .

பதில் பேசும் மனநிலையில் அவன் இல்லை . அமைதியாக அதே இடத்தில் அமர்ந்திருக்க " சௌந்தர்யா அவரை நம்ம ரூம்ல போய் குளிச்சிட்டு வர சொல்லு " என்றான் கௌதம் . அஜய் சட்டென எழுந்து நிற்க சௌந்தர்யா உள்ள போங்க என்று தலை அசைத்தாள் . ஒரு சிறு புன்னகையுடன் குளித்து விட்டு வெளியே வந்ததும் அவன் தலை காயத்திற்கு மருந்திட்டான் மதன் . " இப்போ தான் ஆப்ரேஷன் முடிஞ்சிருக்கு . மறுபடியும் அடி பட்டு மண்ட கோளாறு வந்துட்டா எப்படி சமாளிக்கிறது . பேசின வாயிக்கு தண்டனை கிடைச்சிட்டா . எருமை மாடு மாதிரி வளர்த்திருக்க பாத்து நடக்க தெரியாது . உன்னோட கண்ணு என்ன போறடியில இருக்கா " கடுமையாக கடிந்து கொண்டான் மதன் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now