முடிவின் தொடக்கம் நீயே 💙 52

354 11 0
                                    

பிரபா மதன் நிச்சயதார்த்தம் பெரிய அளவில் இல்லை என்றாலும் சற்று நெருங்கிய உறவினர்களால் பெருமளவில் காணப்பட்டது . அஜய் கயல் அருகில் நெருங்காமல் தூரமாக நின்றபடி அவள் பார்த்துக் கொண்டே நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தான் . அப்போது கோபால் நண்பர் மகள் மீரா அவன் அருகில் வந்து நின்றதும் " மதனுக்கு அப்புறம் அஜய் மீரா கல்யாணம் தானே " என்று சுற்றியிருந்த ஒரு நண்பன் ஒருவன் கேள்வி எழுப்பியதும் அஜய் அதிர்ந்து போய் கயல்விழியை பார்க்க அப்பொழுதுதான் உள்ள நுழைந்த கயல் குடும்பமும் இதை கேட்டுவிட்டனர்.

" என்ன பேசிட்டு இருக்கீங்க அஜய்க்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு . அதுவும் காதல் திருமணம் . அவனோட மனைவி இப்போ கர்ப்பமா இருக்கா விஷயம் தெரியாம பேசாதீங்க " என்று சற்று கோபமாகவே கூறினான் மதன் . ஆனால் இத்தனைக்கும் அஜய் குடும்பமும் அஜையும் அதிர்ந்து நின்றார்களே தவிர வாயை திறக்கவே இல்லை . கௌதம் மேலும் கொதித்துப் போனான் .

தங்கை அங்கீகாரம் இல்லாத இடத்தில் தேவையில்லாத பொருளாக இருப்பதைப் போல் உணர்ந்தவன் அவள் அருகில் வந்து "இதெல்லாம் பாக்கணும்னு இங்க வந்து இருக்கியா . இப்பவே அவன் வேணாம்னு சொல்லு . எங்க கூட வந்துடு பாப்பா . அவன் உனக்கு வேண்டாம் " என்று தனது கோபத்தை மறைத்து கேட்க கண்கலங்கி நின்றாலே தவிர பதில் எதுவும் கூறவில்லை .

இத்தனை நாளும் கயல் வீட்டிலிருந்த போது மனைவியை விட்டுவிட்டு தங்கை அருகில் தான் படுத்து இருந்தான் கௌதம் . ஒருமுறை அவள் மயக்க மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டது ஞாபகம் இருந்ததால் அவளை தனியே விட மனமில்லாமல் அவளுடனே இருந்து கொண்டான் . சௌந்தர்யாவும் விஷயம் அறிந்து கௌதம் இல்லாத நேரத்தில் கயலுடனே இருந்து கொண்டாள் .

அப்படி கண்ணில் வைத்து பார்த்துக் கொண்டவன் தங்கை படும் கஷ்டம் தாங்க முடியாமல் மீண்டும் ஒரு முறை அவளிடம் கேட்க அவளோ வாயை திறக்கவே இல்லை . பூர்வி கயல் அருகில் கோபமாக வந்து " புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி இருக்காம வாயை திறந்து நான் தான் அவன் பொண்டாட்டின்னு சொல்ல வேண்டியது தானே டி . எதுவுமே மண்டையில் உரைக்கிற மாதிரி புரிய வச்சா தான் அவனுக்கும் புத்தி வரும் . இதுக்கு அவன் பைத்தியமாகவே இருந்திருக்கலாம் " என்றதும் " அப்படி எல்லாம் சொல்லாதீங்க அக்கா " அழுகையுடன் கூறினாள் கயல் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now