முடிவின் தொடக்கம் நீயே 💙 46

424 14 4
                                    

கர்ப்பவதி என்று பாராமல் கயல்விழியை பிடித்து தங்கள் அறைக்கு இழத்து சென்றான் அஜய் கிருஷ்ணா . அரக்கன் கையில் மாட்டிக்கொண்ட கயல்விழியின் கைகள் கன்றி சிவந்து போனது . "வலிக்குது அஜய் மெதுவா முடியலை " என படிகளில் அவன் இழுத்த இழுப்பிற்கு போக முடியாமல் தட்டு தடுமாறி வயிற்றை பிடித்தபடி அழுது கொண்டே சென்றாள் . அவன் மூளை அவள் நிலையை யோசிக்காமல் கோவத்தில் நிறைந்திருந்தது ‌ .

தன் அண்ணனையும் தன்னையும் இணைத்து அவன் கொச்சைப்படுத்தி பேசுவதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை . வேகமாக தங்கள் அறைக்கு வந்து அவளை உள்ளே தள்ளி கதவை சாற்றியவன் "ஒருத்தன் தொட்டு தொட்டு பேசினா அவனை விட்டு தள்ளி நிக்காம பல்லை இளிச்சிட்டு நிற்கிற . ஒரு கல்யாணம் ஆன பொண்ணு இப்படி தான் அடுத்தவன் தொட்டு பேச விடுவாலா . பணக்காரன்னு தானே எங்க வீட்டுக்கு வந்த . சொகுசு வாழ்க்கை தான் டி உனக்கு . அதுவும் இப்ப என் பிள்ளையை சுமக்குறன்னு கூடுதல் கவனிப்பு வேற . உண்மையா இது என் குழந்தை தானா .‌ இல்லை எங்க வீட்டு பணத்தை ஓசில செலவு செய்ய டிராமாவா " என கேட்டவனை தீ பட்டது போல் சட்டென நிமிர்ந்து பார்த்த கயல்விழி அருவருப்பாக அவனை பார்த்தாள் .

கண்களை துடைத்துக் கொண்டவள் "இன்னொரு வார்த்தை தப்பா பேசினீங்க அவ்வளவுதான் மரியாதை . அவர் என்னோட அண்ணன் . உங்க மேல உள்ள காதலால் மட்டும் தான் நான் வாயை மூடிகிட்டு இருக்கேன் அதுக்காக நீங்க என்னோட அண்ணன் கூட சேர்த்து வச்சு பேசினீங்க மரியாதை கேட்டுடும் . அதுவும் குழந்தை ... " என்றவளுக்கு குரல் அடைத்தது . " இது என் அஜய் வாரிசு . எங்க காதல் பரிசு . தப்பா பேசாதீங்க " விரல் நீட்டி எச்சரித்தாள் . இத்தனை நாள் பொறுத்து போனவள் கோபத்தில் கத்திவிட்டாள் .

"என்னடி புதுசா கோவம் எல்லாம் படுற . உன்னோட நடிப்பு எல்லாம் தெரிஞ்சிருச்சுன்னு நீ உண்மையை ஒத்துக்க போறியா" என நீட்டிய அவள் வீரல்களை நசுக்கிய படி கேலியாக கேட்டவன் அவள் கையைப் பிடித்து தன்னருகில் இழுத்தான் . "நான் உன்னை நடிக்கலை நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கும் இல்லை . உங்க கண்ணுக்கு முன்னாடி தானே உங்க அம்மா அண்ணி அண்ணி அப்பா எல்லாரும் என்கிட்ட பேசுறாங்க . ஆனா உங்களுக்கு மட்டும் நான் பேசுறது நடிப்பு போல இருக்கு . இத்தனை நாள் என் கூட வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்கு ஞாபகம் இல்லாமல் இருக்கலாம் . ஆனா நடப்புல நடக்குற விஷயத்தை பார்த்து எப்படி நான் நடிக்கிறேன்னு நீங்க சொல்லலாம் . உங்க மனசாட்சிக்கு தோண வேண்டுமா . அந்த அளவுக்கு கூடவா நீங்க சொந்த புத்தி வச்சி யோசிக்க மாட்டிங்க " என்று வெறுப்புடன் அவள் கூறியது எல்லாம் கேட்காமல் அவள் நெருக்கத்தில் அகண்ட விழிகளையும் பால் வண்ண முகத்தையும் பார்த்து கரைந்து கொண்டு இருந்தான் அஜய் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now