முடிவின் தொடக்கம் நீயே 💙 57

347 14 5
                                    

" உன் குடும்பத்தில்ல நடந்த பிரச்சனைக்கு என் பொண்ணு எப்படி காரணமாக முடியும் " கணேஷ் கேட்டதும் " ஆதாரம் இங்க‌ இருக்கு " என்று மதன் வினோத் பாலா மூவரும் உள்ளே வந்தனர் . இவர்கள் தனக்கு எதிராக ஏதாவது ஆதாரம் எடுத்து வந்து விட்டார்களா என்று பயந்த படியே மீரா நின்றாள் . " நீங்க நினைக்கிற மாதிரி உங்க பொண்ணு சாதாரணமான ஆள் இல்லை . எவ்வளவு வேலை செஞ்சு என் குடும்பத்தில்ல பிரச்சினை இழுத்து விட்டு இருக்கா தெரியுமா " என்று சில போட்டோ மற்றும் வீடியோக்கள் காட்டினான் மதன் .

அதில் தெளிவாக இருந்தது மீரா டாக்டர்களிடம் அஜய் ரிப்போர்ட் சிலவற்றை மாற்றுவதும் ரவுடிகள் சிலரிடம் பணத்தை கொடுப்பது போன்றது . கணேஷ் அதிர்ச்சியாக அவளை பார்க்க " ஆமா அப்பா அஜய் மேல ரொம்ப ஆசை வச்சிருந்தேன் . அவனை கல்யாணம் பண்ணிக்க தான் படிச்சு முடிச்சிட்டு ஆசையா வந்தேன். ஆனா நடுவுல வந்த இவ அவனை காதலிச்சு கல்யாணம் பண்ணி கிட்டா . என்னால தாங்க முடியலை . அவளை பத்தி நிறைய விசாரிச்சேன் . அஜய்க்கு சுயநினைவு இல்லைன்னு தெரிஞ்சுக்கிட்டு அவன் மீண்டு வர காத்திருந்தேன் . அதே போல அவனுக்கு பழைய விஷயம் ஞாபகம் வர லேட் ஆகும்னு டாக்டர் சொல்லிட்டாரு . "

" அதை யூஸ் பண்ணி ஆங்கிள் போனை ஹாக் பண்ணி அஜய் கிட்ட இவளை பத்தி தப்பா சொன்னது நான் தான் . எல்லாம் சரியா போயிட்டு இருந்துச்சு . ஆனா எப்போ இவனுக்கு ஞாபகம் வந்துச்சுன்னு தெரியலை . என்னை பத்தி கண்டு பிடிச்சிட்டான் . பட் இவ இருந்தா தானே அவ கூட வாழ்வான் . இவ உயிரோட இருக்க கூடாது " என்று கயலை தாக்க வர மதன் பாலா இருவரும் அவளை பிடித்து விட்டனர் .

கௌதம் தினேஷ் அஜய் மூவரும் கயலுக்கு முன் அரண் போல நிற்க மீராவால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது . " என்னை விடுங்க டா " கத்தி ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தாள் மீரா . பாலா போலீஸ்க்கு ஏற்கனவே தகவல் அளித்திருக்க வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டு அவளை இழுத்து சென்றனர் . கணேஷ் மகள் செய்த காரியத்தால் தலை குனிந்து மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now