முடிவின் தொடக்கம் நீயே 💙 38

378 11 5
                                    

மதன் கயலுக்காக ஒவ்வொரு வேலையாக பொறுமையாக புரியும் படி சொல்லிக் கொடுத்தான் . அவளும் சிறிது சிறிதாக கற்றுக்கொண்டு அவன் கூறியபடி பிழை இல்லாமல் செய்து கொண்டிருந்தாள் . நீண்ட நேரம் வேலை செய்தால் ஒய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் " அண்ணா இவரு தூங்கிட்டு இருக்காரு . இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டார் நான் பாலாவையும் வினோத்தையும் பாத்துட்டு வரேன் " என்று கயல் கிளம்ப மதன்‌ பயந்தான் .

"எழுந்தா உன்னை தேடி கத்துவானே மா " என்று சொன்னதும் " இல்லை சீக்கிரம் வந்துடுவேன் அண்ணா " என்று வேகமாக வெளியேறினாள் . மனதில் அவன் தூங்கும் நேரத்தை கணக்கிட்டு அதன்படி திரும்பி சென்று விடலாம் என்று முடிவெடுத்திருந்தாள் . அதே எண்ணத்துடன் வேகமாக வந்தவள் பாலா வினோத் கேபின் முன்னே நின்று தலையை எட்டி குணிந்து பார்த்தாள் . இருவருக்கும் இடையே ஒரே ஒரு தடுப்பு தான் "டேய் லூசுகளா " என்று அவள் அழைத்ததும் இருவரும் நிமிர்ந்து பார்த்தனர் . காலையிலே தான் பார்த்து கண்களால் பேசிக் கொண்டார்களே . அஜய் இருந்ததால் அவளை நெருங்க வில்லை இருவரும் .

"ஏய் பாப்பா இங்க என்ன பண்ற . அஜய் அண்ணா உன்னை தேட போறாரு" என்று பாலா கூறியதும் "இவ தைரியமா வந்திருக்கானா கண்டிப்பா அவரு தூங்கிருப்பாரு " என்று சரியாக சொன்னான் வினோத். " பரவாயில்லை இவனுக்கும் கொஞ்சம் மூளை வளர்ச்சி அதிகரிச்சிட்டு . அந்த டெக்னிக்கை இவனுக்கும் சொல்லிக் கொடு " என்றவள் "சீக்கிரம் வாங்கடா இந்த கேண்டின்ல சமோசா நல்லா இருக்குமாம் " என்று முன்னே செல்ல தலையில் அடித்துக் கொண்டு காலேஜ்ல பண்ண மாதிரியே பண்றா டா என்று இருவரும் பின்தொடர்ந்தனர்.

துப்பட்டாவை திருகிய வண்ணம் எங்கே செல்வது என்று தெரியாமல் நின்றவளை பார்த்தவர்கள் "வீர வசனம் பேசிட்டு வந்தவளை நீ பாத்தியா வினோத்து " என்று கேலியாக பாலா சொல்ல "அவசரத்தில் கையில காசு கொண்டு வரலடா " என்று பாவமாக கூறினாள் கயல் . " சரி சரி வா பாப்பா நாங்க இருக்கோம்ல " என்று அவளுக்கு பிடித்தது போல் சமோசா சாஸ் வாங்கிக் கொண்டு ஒரு டேபிளில் அமர்ந்தனர் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now