முடிவின் தொடக்கம் நீயே 💙 49

365 11 2
                                    

தொலைபேசி தன் கையில் இருந்து பிடுங்கப்பட்டதும் கயல் விழி பதறியபடி திரும்பிப் பார்க்க ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தான் அஜய் கிருஷ்ணா . "உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாதா . எதுக்காக இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கிறீங்க" கோபம் தாங்காமல் கேட்டவளை முறைத்து பார்த்தவன் "உனக்கு எது வேணும்னாலும் என்கிட்ட தான் கேக்கணும் புரிஞ்சுதா" என்றான் உறுமலாக .

"நான் ஏன் கேட்கணும் . எனக்கும் உங்களுக்கும் தான் எந்த விதமான பந்தமும் இல்லைன்னு சொல்லி இவ்வளவு நாள் என்ன பாடா படுத்துனீங்க . இப்ப மட்டும் என்ன உரிமை ஊறுகாய்-ன்னு வந்துட்டீங்க . நான் நீங்க பேசுற பேச்செல்லாம் கேட்டுட்டு பொறுமையா போவேன்னு நினைக்காதீங்க . எல்லாம் ஒரு அளவு தான். அதை நீங்க எப்பவோ தாண்டி போயிட்டிங்க " கோபத்துடன் அவனிடம் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல போனவளை அப்படியே பிடித்து தூக்கி விட்டான் அஜய் .

"என்ன பண்றீங்க விடுங்க" பதட்டம் பயம் ஒன்று சேர அவன் கழுத்தில் தன் கரங்களை மாலையாய் கோத்துக் கொண்டாள் கயல் . " எது பொய் எது உண்மைன்னு நான் கண்டுபிடிக்கிற வரைக்கும் நீ எங்கேயும் போகக்கூடாது . யார்கிட்டயும் உதவியும் கேட்க கூடாது . நீ என்னோட மனைவி தானே . என் தர்மபத்தினி . அப்போ கணவன் சொல்லுற பேச்சை கேளு " என காரில் அமர வைத்தவன் தன் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான் .

நேற்று அவன் நடந்து கொண்டதற்கும் இன்று அவன் பேசுவதற்கும் சற்றும் சம்பந்தமே இல்லை . அஜய் முகத்தில் எந்த வித சலணமும் இல்லாமல் காரை ஒட்டிக் கொண்டிருக்க " உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வந்துட்டாங்க " எதிர்பார்ப்புடன் அவன் முகம் பார்த்து கேட்டாள் கயல்விழி . அவன் பக்கம் சுத்தமாக பதிலே இல்லை . உண்மையாக அவனுக்கு ஏதேனும் ஞாபகம் வந்துவிட்டதா என்று முகத்தில் மகிழ்ச்சியுடன் அவன் தோள்களை பற்றி "உங்களுக்கு ஞாபகம் வந்துட்டு தானே . உண்மை தானே சொல்லுங்க " என கண்ணீருடன் கேட்டாள் கயல் ‌.

முடிவின் தொடக்கம் நீயே 💙 Место, где живут истории. Откройте их для себя