முடிவின் தொடக்கம் நீயே 💙 31

403 9 2
                                    

"என்னமா வாசலையே பார்த்துகிட்டு இருக்கீங்க" என்று கீதாவை பார்த்து கௌதம் கேட்டான்.. " பாப்பா போய் ரொம்ப நேரம் ஆச்சு டா .. இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பா .. ஆனா மணி ஆகிட்டு இன்னும் வரவே இல்ல அதான்" என்றால் ஒரு வித பயத்துடன்.. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாதவள்.. இப்போதுதான் சிறிது சிறிதாக தேறிக் கொண்டு வருகிறாள்.. அவள் வெளியே செல்லும் போதெல்லாம் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது கீதா தான் .. கௌதமும் நேரத்தை பார்த்தான்.. அவள் எப்பொழுதும் வரும் நேரம் தாண்டி கடந்திருந்தது ..

"ஒன்னும் இல்லம்மா நீங்க உள்ள போங்க.. நான் பார்க்கிறேன்" என்று கூறியவன் சௌந்தர்யாவிடம் கண்காட்டினான்.. சௌந்தர்யா கீதாவின் கையை பிடித்துக் கொண்டு "அந்த வாலை பத்தி தெரியாதா அத்தை.. இந்நேரம் ஏதாவது ஐஸ்கிரீம் கடையை பார்த்து பொறுமையா சாப்பிட்டுட்டு வருவா " என்றவள் "நீங்க போய் என்னன்னு பாத்துட்டு வாங்க" என்றால் கணவனிடம் .. கௌதம் கயலின் காதல் பற்றி அவளிடம் கூறிவிட்டான்..

கௌதம் தொலைபேசியை எடுத்து கயலுக்கு அழைத்தான்.. கயல் அழைப்பை எடுக்காமல் திரையை பார்த்துக் கொண்டிருக்க மதன் "யாரு வீட்ல இருந்தா" என்றான்... " ஆமாம் மதன் அண்ணா .. இப்ப என்ன பண்றது .. மணி ஆகிட்டுன்னு கால் பண்ணுறாங்க "என்றால் பதட்டத்துடனே.. அஜயை பார்த்ததில் தன் குடும்பத்தை மறந்துவிட்டால் கயல்.. தொலைபேசியை வாங்கி அழைப்பு ஏற்றான் மதன்...

"ஹலோ அண்ணா நான் மதன் பேசுறேன்" என்றதும் "ஹலோ மதன் நீயா .. பாப்பா வரத்துக்கு லேட்டாயிடுச்சுனு அம்மா கேட்டாங்க டா அதான் போன் பண்ணினேன்.. அவ உன்கூட தான் இருக்காளா .. பத்திரம் தானே" என்றான் குரலில் கொஞ்சம் பதட்டத்தை கூட்டி.. ஏனென்றால் மதன் அவளிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு தான் நன்றாக தெரியுமே .. அதுவும் மதன் அன்று பேசிய பிறகு கயலிடம் பேசவே இல்லை என்பது வரை அறிந்து வைத்திருந்தான் ..

மதன் அழைப்பை ஏற்கும் போதே லவுட் ஸ்பீக்கரில் போட்டிருந்தான் .. மேலும் கௌதம் பதட்டத்துடன் "ஏற்கனவே பாப்பாவ நெனச்சு பயமா இருக்கு மதன்.. அம்மா வேற இப்பதான் ஆக்சிடென்ட் ஆயிருக்கு மறுபடியும் ஏதாவது ஒன்னொன்னா தாங்க முடியாது என்று தினமும் புலம்புறாங்க .. வீட்டுல தனியா அடஞ்சிக்கிறா.. அவ மனசு மாறி சந்தோஷமா இருக்கணும்னு தான் இப்ப என் கல்யாணம் கூட பண்ணிகிட்டேன் .. சௌந்தர்யா முழுசா அவ கூடவே இருந்து பாத்துகுறா .. இருந்தும் அவளை மாற்றவே முடியல டா..

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now