முடிவின் தொடக்கம் நீயே 💙 13

340 12 2
                                    

கயல் கேட்ட கேள்வியில் நண்பர்கள் நால்வரும் எழுந்து நின்று விட்டனர் ... அவள் சிறு பிள்ளை குணத்துடன் இருப்பதாக தான் நினைத்துக் கொண்டிருந்தனர்... ஆனால் இவ்வளவு குழந்தையாக இருப்பாள் என்று யாருமே எண்ணவில்லை ... ஏன்டி அந்த அண்ணன் கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசின... இப்போ ஊட்டி விட்டுட்டு அந்த சாதனா பொண்ணை முறைச்சு பார்த்த...

இதெல்லாம் உன்னோட ஆழ்மனது ஆசை... உன் மனசுல இருக்குற ஆசை உன் மூளைக்கு புரியலையா... அது என்னன்னு நீ நினைச்சாச்சும் பாத்தியா என்று அவர்கள் கேட்க ... அவர்களை உதட்டை பிதுக்கி இல்லை என்று தலையாட்டியவள்.. எனக்கு புரியல... அவரை இப்படி மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க கூடாதுன்னு என் மனசு சொல்லுது.. எனக்கே ஆச்சரியமா இருக்கு ... ஆசை இனிமே தான் படனும்... அவரு தான் என்னை விடவே மாட்டாறே...

நம்ம அஞ்சு பேரும் சண்டை போட்டுக் இருக்குறது வேற நான் அவருக்காக சண்டை போட்டது எனக்கே ரொம்ப வித்தியாசமா இருக்கு டா என்று பாலாஜியிடம் கூறியவள்.. பிரபாவின் அருகில் அமர்ந்து கொண்டு நம்ம ஸ்கூல்ல கூட நிறைய பசங்க கிட்ட நம்ம வந்து பிரப்போஸ் பண்ணுவாங்கல டி அப்போ கூட ஒரு பீலிங் வந்தது இல்லை... ஏன் காலேஜ் வந்த புதுசுல ஒருத்தவன் ஐ லவ் யூ என்று சொன்னானே... அவன் இப்ப கமிட் ஆகி வேற ஒரு பொண்ணு கூட சுத்துறான்... அவனை பார்த்து கூட எனக்கு பொறாமை வந்ததில்லை..

ஆனா சீனியர் என் மனசை ரொம்ப பாதிச்சுட்டாருன்னு தோணுதடி ... இப்ப எல்லாம் படத்துல ஏதாவது லவ் சீன் வந்தா கூட அவர் பேசினது தான் ஞாபகத்துக்கு வருது ... அந்த அளவுக்கு அவரைப் பற்றியே யோசிக்க வச்சுட்டாரு என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற... அடி கூறிக் கெட்டவளே காதல் வந்தது கூட தெரியாம இத்தனை நாள் அந்த மனுசன பாடா படுத்தினதும் இல்லாம எங்க எல்லாரையும் அந்த ஆள் கிட்ட மாட்டிவிட்டு இருப்பியேடி...

இந்த எழவை அப்பவே சொல்லி இருந்தா அந்த மனுசனாவது சந்தோஷமா இருப்பாரே என்று லாவண்யா அவளை திட்ட... அடிபோடி நானே குழப்பத்துல இருக்கேன்னு தானே சொன்னேன்... முழுசா அவரை ஏத்துக்கிற அளவுக்கு எனக்கு இன்னும் அறிவு வளரள மகளே... நானே இப்பதான் ஏதோ கொஞ்சம் என் மண்டையில உள்ள மூளையை தட்டி யோசிக்கிறேன்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now