முடிவின் தொடக்கம் நீயே 💙 18

315 11 4
                                    

கயல்விழி தினேஷுடன் கல்லூரியில் இருந்து திரும்பியதும் தன் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்த சந்துருவை பார்த்து அதிர்ந்து நின்றாள்... தினேஷுக்கும் கோபத்தில் அவனை நோக்கி அடிக்க பாய்ந்தவனை கயல்விழி தடுத்து பிடித்தால்... சந்துருவின் எதிர்பக்கம் தனது தந்தையும் அண்ணனும் அமர்ந்திருக்க எதற்காக இவனை நடு வீட்டில் அமர வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற காரணம் புரியாமல் இருவரும் உள்ளே நுழைந்தனர் ...

கயல்விழி வந்ததும் அவளை மேலிருந்து கீழாக சந்துரு பார்த்ததும் தினேஷ் அவளை தன் பின் மறைத்து நிறுத்திக் கொண்டான்... நீ உள்ள போ கயல் என்று தினேஷ் கூறியதும் அவளும் அவன் சொல் படியே உள்ளே போக நினைக்க சந்துருவின் பேச்சு அவளை நிறுத்தியது... அவளை வச்சிக்கிட்டே பேசலாமே எதுக்காக உள்ள அனுப்புறீங்க என்று நக்கலாக அவன் எதிரில் இருப்பவர்களை பார்த்து கேட்டான்...

என்ன கேட்கணும் என்பதைப் போல் கயல்விழி தன் அண்ணன் கௌதம் மற்றும் தனது தந்தை மோகனை பார்க்க... கிச்சன் கதவின் ஓரத்தில் கீதா நின்று கொண்டிருந்தாள் சோகமாக ... சந்துருவின் தந்தை சங்கரிடம் மோகன் கௌதமிடம் அவன் பேசியதை சொன்னதும் அவனை வார்த்தைகளால் சரமாரியாக திட்டி விட்டார்... மகன் குணத்தில் நல்லவன் இல்லை என்று தெரிந்ததும் அவன் வாழ்வை நல்ல வழியில் கொண்டு செல்ல தான் கயல்விழியின் வீட்டில் சம்பந்தம் பேச வந்தார்...

ஆனால் மோகன் தன்மையாக மறுத்து விட்டார்... மோகன் மீது சங்கருக்கு கோபம் இல்லை... கௌதமிடம் அவன் பேசியதை கேட்டதும் சினம் கொண்டு அவனை கடுமையாக எச்சரித்தார் ... அவர் சொல்படியே இங்கு மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று வந்தான்... ஆனால் மனதில் கயலையும் கௌதமையும் சமயம் வரும்போது வெறி திர பழிவாங்க வேண்டும் என்று பழி எண்ணத்தை மட்டும் தள்ளி வைத்து விட்டு நல்லவன் போல் இங்கு வந்திருக்கிறான்...

என்ன தப்பா கேட்டுட்டேன்னு எங்க அப்பா கிட்ட வந்து இப்படி பேசி இருக்கீங்க அங்கிள்... எனக்கு கயலை புடிச்சிருக்கு கட்டிவைங்கன்னு சொன்னேன் ... எப்படியும் படித்து முடித்துவிட்டு ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க... அது நான் ஏன் நானா இருக்க கூடாதுன்னு உங்க மகன் கிட்ட கேட்டேன்... அதுக்காக உங்க பையன் கிட்ட நான் என்னென்னமோ பேசிட்டேன்னு எப்படி நீங்க எங்க அப்பா கிட்ட சொல்லலாம்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Opowieści tętniące życiem. Odkryj je teraz