முடிவின் தொடக்கம் நீயே 💙 21

303 9 1
                                    

கயலுக்கு அஜய் ஒரு பணக்காரன் என்ற விஷயம் தெரிந்ததும் குழப்பத்தில் இருக்க தினேஷ் அவளிடம் ஆதரவாக பேசிவிட்டு சென்றான் ... அன்றைய நாள் மிகவும் கொடுமையாகக் கழிந்தது... நன்றாக ஆரமித்த ஐவி இப்படி முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை ... அத்துடன் இன்னும் இரண்டு நாட்கள் இங்கு தான் வந்து செல்ல வேண்டும் என்று கயலுக்கு மனது உறுத்தியது.. அஜயின் தந்தையை பார்க்கும் போதே அவளுக்கு அடி வயிற்றில் ஒரு பீதி கிளம்பியது ...

அத்துடன் அவனின் அண்ணன் அவன் கோபத்தில் அறையை சேதப்படுத்தியது பற்றி கூறியதும் தன்னால்தான் வீட்டிலும் கோவப்பட்டு உள்ளான் என்பதை அறிந்து கவலை கொண்டாள்... ஏற்கனவே சந்துரு வீட்டில் வந்து பெண் கேட்டு சென்றதற்கு அவள் தந்தை வருத்தத்தில் இருக்க ... இப்போது அஜையின் காதல் விஷயத்தை கேள்விப்பட்டு தன் தந்தையை தரக்குறைவாக அவர்கள் பேசி விடுவார்களோ என்ற பயம் அவளுக்கு அதிகமாக தோன்றியது....

தொலைக்காட்சியில் செய்திகளில் எத்தனையோ தங்களைப் போல நடுத்தர வர்க்கத்தின் குடும்பத்தினரை பணக்கார வீட்டு பையன் விரும்பினால் அவர்களின் எதிர்வினை என்ன என்பதை போட்டு காட்டியதை நினைவு படுத்தி பார்த்தவள் .. தன் குடும்பத்திற்கு தன்னால் ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அதிகமாக பயந்தால் கயல்... பாலா வினோத் இருவரும் பிரபா லாவண்யா இருவரிடம் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு தினேஷின் அருகில் வந்தார்கள்...

என்ன அண்ணா இப்படி ஆயிட்டு என்று இருவரும் பரிதாபமாக கேட்க ... எனக்கும் என்ன பண்றதுனே தெரியல இது பற்றி அஜய் கிட்ட பேசினா தான் ஒரு முடிவு கிடைக்கும்... நீங்க அவ கூட இருந்து பத்திரமா பாத்துக்கோங்க டா ... ஏற்கனவே லூசுத்தனமா ஏதாவது யோசிப்பா ... ஏதாவது பேசி மனச மாத்துங்க என்றவன் அஜய்க்கு அழைத்துக் கொண்டே இருந்தான் ... அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்படாமல் போக அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு நின்றான் தினேஷ் ...

முடிவின் தொடக்கம் நீயே 💙 जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें