முடிவின் தொடக்கம் நீயே 💙 43

374 12 0
                                    

தலைவலியில் துடித்த அஜய் பார்த்த கயல்விழிக்கு சர்வமும் அடங்கி போனது . டாக்டர் வேகமாக வந்து அவனை பரிசோதித்து மயக்க மருந்தை கொடுத்து அவனை ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பினார் . "சொல்லிட்டு தானே மேடம் போனேன். அவருக்கு பழைய விஷயங்களை ஞாபகப்படுத்துகிறேன்னு ரொம்ப யோசிக்க வைக்காதீங்க .‌ மூளையில்ல நடந்திருக்கிறது ரொம்ப நுணுக்கமான ஆப்ரேஷன் . எப்படி பண்ணி அவரை உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைக்கு கொண்டு வராதீங்க " என எச்சரித்து சென்றார் .

இங்கு கயலின் நிலை அந்தோ பரிதாபமாக இருந்தது . திரும்பி வந்து விட்டான் ஆனால் முற்றிலும் தன்னை மறந்தவனாக வந்தவனை என்ன செய்வது . கயலை அவன் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது தான் பார்த்தான் . அப்படி என்றால் இப்பொழுது காயலை பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது என நினைத்தவள் கண்ணீர் விட்டபடி நின்றிருந்தாள். கௌதம் தினேஷ் தங்கைக்கு ஆறுதல் அளிக்க எதையும் காதில் வாங்காமல் அஜய் மற்றும் தன் வயிற்றில் வளரும் குழந்தையை நினைத்து பரிதவித்து போனாள் .

" ரொம்ப நேரம் இங்கு இருக்க வேண்டாம் வீட்டுக்கு போகலாம் " என சௌந்தர்யா அழைக்க அவனை விட்டு ஒரு அடி கூட நகர மாட்டேன் என மறுத்து விட்டாள் கயல் . "அவளை மறந்து விட்டான் .‌ ஆனால் யாரும் அவளை அவனிடம் இருந்து பிரிக்கப்போவது இல்லையே . இந்த பெண் ஏன் இவ்வாறு பிடிவாதம் பிடிக்கிறாள் என்ற யோசனையுடன் " வீட்டுக்கு கிளம்பி போ . வயித்துல இருக்குற குழந்தை முக்கியம் தானே " கோபால் கேட்டதும் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் கயல் .

அதில் நீங்கள் நினைத்ததை போலவே உங்கள் மகன் என்னை மறந்து விட்டான் என அர்த்தம் தெரிந்தது . அவளின் விழிகளை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் அந்த அறைவை விட்டு வெளியேறிவிட மற்றவர்களும் வெளியே சென்று விட்டனர் . தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் கயல் . எப்பொழுது அவனுக்கு தன்னை பற்றி ஞாபகம் வந்து தங்கள் வாழ்வு நன்றாக செல்லும் என யோசித்தபடியே தலையை அவன் கரத்தின் மீது வைத்து உறங்கி விட்டாள் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now