முடிவின் தொடக்கம் நீயே 💙 6

428 9 0
                                    

வீட்டில் நுழையும் போதே கயலும் கௌதமும் சண்டையிட்டுக் கொண்டே வர அவளதின் தாய் கீதா இருவரின் காதையும் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர வைத்தாள்... ஊரில் இருக்கிற எல்லா அண்ணன் தங்கச்சியும் அமைதியா இருக்காங்க... ஆனா நீங்க சின்ன பசங்க அளவு அட்டூழியம் பண்றீங்க என்றாள்.... நான் என்ன பண்ணினேன் தோ இவன்தான் ...

வரும்போது ஒரு குல்பி வாங்கி தான் சொல்றேன் எருமை மாட்டு பையன் அப்படியே கூட்டிட்டு வந்துட்டான் என்று தனது அண்ணனை திட்டினால்... இந்த எலும்பி வரும்போது தான் மா இரண்டு மிட்டாய் தின்னுட்டு வந்தா.. இப்ப ஐஸ்கிரீம் கேட்கிறா... இருடி அப்பா வரட்டும் சொல்றேன் என்றான்.... அவளும் அப்பா வரட்டும் டா நானும் சொல்றேன் என்றால் தனது அண்ணன் தலையில் அடித்து..

சிறிது நேரம் இருவரும் முதுகை காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர்... ரொம்ப நேரம் அதே பொசிஷனில் அமர முடியாததால் கௌதம் சாய்ந்து படுத்து கொண்டான் ... கயல் ரிமோட்டை எடுத்து டிவி போட பாட்டு வை டி என்றான் கௌதம்... முடியாது டா போண்டா... நான் சின்-சான் பாக்க போறேன் என்று மாற்ற... ரிமோட்டை பிடுங்கி அவள் கை கேட்டாத தூரம் தூக்கியவன்... மண்டையிலேயே கொட்டி உள்ள உக்காந்து பாரு என்று விரட்டி விட்டான் ...

போடா நாயே என்று உடையை மாற்றிக் கொண்டு தாய்க்கு உதவி செய்ய சென்றாள் ...அவன் இப்ப தான் டி ஊருக்கு வந்து இருக்கான் அவனை கொஞ்சம் டிவி தான் பார்க்க விடேன் என்று சொல்ல... அவன் வேணும்னே பண்றான் நீயும் உன் பிள்ளைக்கே சப்போர்ட் பண்ணு... உனக்கு போய் உதவி செய்ய வந்தேன் பாரு என்ன சொல்லணும் என்று பக்கத்து வீட்டு அவள் சில்வண்டு நண்பர்களோடு விளையாட சென்று விட்டாள் ....

என்னடா சொன்னா உன் தங்கச்சி.. பிரேஸ்லெட் அவளுக்கு புடிச்சிருக்கா என்று உள்ளே நுழைந்ததும் மோகன் கேட்க... ரொம்ப புடிச்சிருக்கான்பா என்றான் பொறுமையாக ...தந்தையை கண்டால் மட்டும் இருவரும் கப்சிப் என்று ஆகிடுவார்கள் ...அவர் கண்டிப்பானவர் என்பதால் ... வேலை எல்லாம் எப்படி போகிறது பா என்று கேட்டார் மோகன்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now