முடிவின் தொடக்கம் நீயே 💙 37

310 13 3
                                    

கோபால் கோபத்தில் ஏதாவது தன்னை திட்டுவார் என்று நினைத்தாள் கயல் . ஆனால் இப்படி ஒரு வார்த்தையை அவள் எதிர்பார்க்கவில்லை . ஏதோ அவரது மகனை மயக்கி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டது போல் அல்லவா கூறுகிறார் . அவள் நினைத்திருந்தாள் " உங்க பைத்தியக்கார மகனை திருமணம் செய்ய மாட்டேன் " என்று கூறியிருக்கலாம் .

அவளது குடும்ப உறுப்பினர்களும் இப்படி ஒரு பைத்தியக்காரனுக்கு தன் மகளை கட்டி வைக்க மாட்டேன் என்று மறுத்திருக்கலாம் . மனிதாபிமான அடிப்படையில் கயலின் குடும்பத்தினர் ஒத்துழைக்க கயலும் அவன் மேல் உள்ள காதலினால் அவனை திருமணம் செய்து கொண்டாள் . இந்த திருமணத்தில் நினைத்ததை சாதித்தது அஜையா இல்லை கயலா என்று கோபால் தான் உணரவில்லை.

மகனை அடக்க பல வழிகளில் முயற்சித்திருக்கலாமே ‌. ஏன் எதுவும் செய்யாமல் அவனை மேலும் மூர்க்கமாக மாற்றி வைத்திருந்தார்கள் . யாரையும் நெருங்க கூட விடவில்லை அஜய் . மகன் மீது பாசம் இருந்தால் ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலாக இழுத்து கொண்டு திரிந்திருக்கலாம் . அப்போதாவது அவன் குணமடைய வாய்ப்பு வந்திருக்கலாம். எதுவும் செய்யாமல் அவனை குணப்படுத்துபவளையும் குற்றம் சாட்டினாள் என்ற செய்வாள் .

வந்த இரண்டு நாளில் அவளை நான்கு கிலோ எடை குறைத்து இருந்தான் அஜய் . ஒட்டுண்ணி போல் அவளை ஒட்டிக் கொண்டே தெரிந்தது எல்லாம் அவர் கண்ணில் படவில்லையா . 'காதலுக்கும் மற்றதற்கும் இவருக்கு வித்தியாசம் தெரியாதா ' என்று கேள்வி அவளுக்கு தோன்ற தன் கண்ணீர் வழியும் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள் " ஆமா சார். நான் நினைச்சதை சாதிச்சிட்டேன் .என் காதல் ஜெயிச்சிருச்சு " என்று நிமிராக கூறினாள் .

"பணக்காரன்னு பைத்தியமா இருந்தாலும் கட்டிக்கிட்ட . இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பொய்யான வேஷம்னு நானும் பாக்குறேன் . கொஞ்ச நாள்ல என் மகனுக்கு நீ புளிச்சு போயிடுவ . அப்ப அவனே உன்னை கழுத்த புடிச்சு வெளியே தள்ள தான் போறான்" கோபால் கயலை பார்த்து நக்கலாக கூறியதும் "பைத்தியம்னு சொன்ன கெட்ட கோவம் வரும் . அவர் மறந்து தான் போயிருக்காரு . அதுவும் இல்லாம நீங்க நினைக்கிறது எப்போதுமே நடக்காது . என்னோட அஜய் மேலே உள்ள நம்பிக்கையும் எங்க காதல் மேல உள்ள நம்பிக்கையும் எனக்கு அதிகம்" என்று கூறிவிட்டு கோபத்தை கட்டுப்படுத்த கிச்சனுக்கு சென்றாள் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Место, где живут истории. Откройте их для себя