முடிவின் தொடக்கம் நீயே 💙 39

288 13 1
                                    

கத்திக் கொண்டிருந்த அஜய் திடீரென கயலின் மீது மயங்கி சரியவும் மூவரும் பதட்டம் அடைந்தனர் . உடனே அவனைத் தாங்கி பிடித்த மதன் அருகில் இருந்த சோபாவில் படுக்க வைத்தான். " அஜய் எழுந்திருங்க . என்ன ஆச்சு " கயல் அவன் கன்னத்தை தட்ட அவன் விழிக்கவே இல்லை . "என்னாச்சு மதன் அண்ணா . டாக்டருக்கு போன் பண்ணுங்க " என்று மதனை அவசரப்படுத்த அஜயிடமிருந்து "அம்முஊஊ" என சிறு முனங்கல் வெளிபட்டது ‌ .

" என்ன பாருங்க அஜய்" என்று அவனை எழுப்பி அமர வைத்து தண்ணீர் கொடுத்து அவன் வாயை துடைத்து விட்டாள் கயல் . "தலை வலிக்குதாங்க ஹாஸ்பிடல் போகலாமா "என்று அக்கறையாக கேட்க "வேண்டாம் அம்மு நீ மட்டும் போதும் "என்று அவளை அணைத்துக் கொண்டான். அவனைப் பார்க்கவே வினோத் பாலா இருவருக்கும் பாவமாக போய்விட்டது . எத்தனை கம்பீரமாக காலேஜில் வலம் வரும் சீனியர் அவன் எப்படி இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்களுக்கும் கண்கலங்கியது.

" நீ வீட்டுக்கு கிளம்பு கயலு மத்தது அப்புறம் பாத்துக்கலாம்" என்று மதன் கூறியதும் சரியென தலை அசைத்தவள் அஜயை அழைத்து கொண்டு வீடு திரும்பினாள் . வழியெங்கும் அமைதியாக அவள் மீது சாய்ந்து ரோட்டை பார்த்த வண்ணம் வந்தன் அஜய் . "ஏதாவது பண்ணுதாங்க "என்று கேட்டவளிடம் இல்லை என்று தலை அசைத்தவன் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான் . வீட்டிற்கு வந்ததும் " சீக்கிரம் வந்து இருக்கீங்க . எதுவும் பிரச்சனை இல்லையே " என்று இருவர் முகத்தையும் ஆராய்ந்த படி கேட்டார் கௌரி .

"இன்னைக்கு போதும்னு வந்துட்டோம் அத்தை . நாளைக்கு போகணும் " என்றதும் திரும்பி அவளைப் பார்த்த அஜய் வேகமாக மாடிப்படி ஏறினான் ‌ . "என்ன ஆச்சும்மா அவன் கோபமா போறான் . உன் கிட்ட கோபப்பட்டானா " என்று ஆச்சரியமாக கேட்டார் . இருவரும் நகமும் சதையுமாக இருப்பவர்கள் ஆயிற்றே . இப்போது என்ன சண்டை என கலக்கம் அவருக்கு . " சின்ன பிரச்சனை அத்தை . அதுவும் இல்லாம உங்க புள்ளை என்கிட்ட கோவமா எல்லாம் இல்ல பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இருக்காரு . நான் பாத்துக்குறேன் "என்று தனது துப்பட்டாவை சரி செய்த வண்ணம் உள்ளே வந்து கதவை தாழிட்டு அவன் பக்கம் வந்தாள்.

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now