முடிவின் தொடக்கம் நீயே 💙 22

287 9 2
                                    

கயலின் நடவடிக்கை அஜய் மற்றும் தினேஷிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது... அவ என்ன யோசிக்கிறாள் என்று தெரியாமல் இருவரும் விழித்தனர் .. ஆனால் அஜய்க்கு தெரிந்து விட்டது அவள் தன்னிடம் இனிமேல் ஒதுக்கும் காட்டுவாள் என்று... அவகிட்ட நான் பேசுகிறேன் தினேஷ் நீ குழப்பிக்காமல் இரு என்று தினேஷிடம் கூறியவன் மதன் வருவதற்காக காத்திருந்தான் ஒரு முடிவுடன்...

மதன் வந்ததும் நீ ஏன் டா வெளியே நிக்கிற என்று கேட்க ... என்ன பண்றது நேரத்துக்கு வந்தா போகலாம்... நீதான் இவ்வளவு லேட்டா வர என்று அவனை திட்டியவன் கயல் நடந்து கொண்ட விதத்தை கூறினான் ... ஆக ஆத்தா பேய் புடிச்சி நிக்கிறா ... திரும்ப நீ தான் வேப்பிலை அடிக்கணுமா என்று கேட்க ... ஆமா நடந்த சம்பவத்துக்கு இது கூட இல்லைனா எப்படி என்று நினைத்தவன் வகுப்பிற்குள் சென்றனர்...

அனைத்து மாணவர்களும் அவர்கள் இருவரையும் வித்தியாசமாக பார்த்தனர்.. இனிமே இவனுங்க தொல்ல வேற தாங்காதே என்று மதன் முனுமுனுத்தான் மதன் சொன்னது போல் அன்று முழுவதும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது... சாதனா கூடுதலாக அஜயிடம் வழிய.. அவனும் முகத்திற்கு நேராகவே இப்படி எல்லாம் என்கிட்ட நடந்துக்காத சாதனா... ஐ லவ் கயல் ... என்கிட்ட நீ என்னதான் ட்ரை பண்ணாலும் கண்டிப்பா எதுவும் நடக்க போறது இல்ல...

முன்னாடியே நான் சொல்லிட்டா உனக்கு நல்லது தானே என்று முகத்தில் அடித்தது போல சொல்லி விட சாதனா முகம் வருத்தத்துடன் சென்று விட்டாள் ... ஏற்கனவே இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இது வேறயா என்று அவன் மனதிற்கு தோன்றியது ... எப்பொழுதும் போல் மாலை வகுப்பிற்காக அவன் காலேஜின் பின்புறம் காத்திருக்க... அதே போல் அனைவரும் வந்தனர் ... கயல் அவர்களிடமும் சாதாரணமாக நடந்து கொண்டிருந்தாள் ...

அவளே அஜயின் வகுப்பிற்கும் அழைத்து வந்தால் ... நண்பர்கள் கூட கண்டுபிடிக்காத அளவிற்கு துல்லியமாக அவள் இயல்பாக இருப்பதைப் போல் காட்டிக் கொண்டிருந்தாள்... அவள் மனதை அறிந்த அஜய் அவளை விட்டு பிடிக்கலாம் என்று காத்திருந்தான் ... கொஞ்ச நாள்ல மெயின் எக்ஸாம் வருது... அதுக்கு படிக்கணும் நானும் இதோட இந்த காலேஜ் விட்டு போக போறேன்.. அதனால நானும் படிக்க வேண்டியது நிறைய இருக்கு ...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now