முடிவின் தொடக்கம் நீயே 💙 42

325 12 2
                                    

அஜய் விழித்ததும் பழைய விஷயங்களை மறந்து விடுவானோ என அனைவரும் பயந்தனர் . ஆனால் கயலை சரியாக அடையாளம் கண்டு கொண்டு " அம்மு " என அழைத்ததும் அனைவரும் நிம்மதியாக உணர்ந்தனர் . கயல் அஜய் மயங்கியதும் அருகில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தாள் . " இது மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை . 95 சதவீதம் எங்கள் முயற்சியும் ஐந்து சதவீதம் கடவுள் சக்தியும்" என்று மருத்துவர் ஏற்கனவே கூறிவிட்டார் .

அஜய் மீண்டு வந்தது அவர்களின் காதல் சக்தியால் என கயல் முழுமையாக நம்பினாள் . அதே தான் மற்றவர்களும் நம்பினார்கள் .‌ " ரொம்ப நேரம் அழுகாத குழந்தைக்கு நல்லதில்லை" சௌந்தர்யா அவள் கண்களை துடைத்து விட்டு சொன்னதும் அழுகையை கட்டுப்படுத்தியவள் "அம்மா இவர் நல்லா ஆனதும் கோவிலை 108 முறை சுத்தி வந்து அன்னதானம் பண்றதா வேண்டி இருக்கேன் போகலாமா "என்றதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

"இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில உனக்கு இந்த வேண்டுதல் தேவையா. நேத்துல இருந்து ஒரே இடத்தில்ல உட்கார்ந்து இருக்க . உனக்கும் குழந்தைக்கும் இது நல்லது இல்லை . இப்போதைக்கு இந்த விஷயத்தை கொஞ்சம் தள்ளி போடு . நாளைக்கு கண்டிப்பா போகலாம் கயல் " அவளின் பிடிவாதம் பற்றி தெரிந்ததால் தினேஷ் எடுத்துக்கூற கௌதமும் தங்கையிடம் " கண்டிப்பா கூட்டிட்டு போறேன் இப்போதைக்கு சும்மா இரு பாப்பா "என அடக்கி வைத்தான் .

அவளுக்கு அஜய் குணமான சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை . " எல்லாரும் சொல்றாங்கல கேட்டுக்கோ மா " கீதா கௌரி இருவரும் அவளுக்கு அறிவுரை கூறிய மனநிறைந்த சந்தோஷத்தில் சற்று கண்கள் சொருகி தள்ளாடியவள் அப்படியே மயங்கி விழுந்தாள் . அனைவரும் அதிர்ச்சி அடைய கௌதம் மெல்லமாக அவளை தூக்கி பக்கத்தில் இருக்கும் ஒரு பெட்டில் படுக்க வைத்தான் . சௌந்தர்யா டாக்டரை அழைத்து வந்தாள் . கயலை பரிசோதித்து விட்டு " அவங்க ரொம்ப டயர்டா இருக்காங்க . ரெஸ்ட் எடுக்கட்டும்" என்று டாக்டர் சென்றதும் அனைவரும் கவலையுடன் கயல்விழியை பார்த்தபடி அமர்ந்துவிட்டனர் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Donde viven las historias. Descúbrelo ahora