முடிவின் தொடக்கம் நீயே 💙 25

317 10 6
                                    

உன் பின்னாடி அஜய் -ன்னு பையன் சுத்துறானே அவனோட அப்பா நான் என்று அவர் கூறியவுடன் மனதில் மகிழ்ந்த கயல் சாரி ஆங்கிள் ... அஜய் உங்களை பத்தி என்கிட்ட சொன்னது இல்ல என்று அவள் இழுக்க ... கண்டிப்பா என்ன பத்தி மட்டும் இல்ல அவன் குடும்பத்தை பற்றியும் உன்கிட்ட எதுவும் சொல்லி இருக்க மாட்டானே என்றார் புதிராக... அவள் இல்லை என்று தலை ஆட்ட .. எங்களோட உயரம் அப்படி என்று அவர் சிரிக்க... கயல் அவரை புரியாத பாவனைகளுடன் பார்த்தால் ..

என்னமா நான் சொல்றது உனக்கு புரியலையா என்று கேட்டார் கோபால்.. இல்லை என்று அவள் தலையை அசைத்ததும் .. என் பையன் ஏதோ நீ கொஞ்சம் அழகா இருக்க ... அதனால வயசு கோளாறுல உன் பின்னாடி சுத்துறான் ... இதெல்லாம் ஒரு உடல் கவர்ச்சி தான் ... எத்தனை நாளுக்கு இந்த காதல் வரும் சொல்லு என்று அவர் கேட்டதும் ... இல்ல அங்கிள் அவரோட முழுமனதுடன் என்னை உண்மையான விரும்புகிறார் ... இது உடல் கவர்ச்சி இல்ல.. எனக்கு தெரியும் என்று ஆணித்தரமாக கயல் கூறியதும் ...

சரி உனக்கு அது அப்படி தெரிஞ்சுட்டு போகட்டும் .... அவன் அப்பா யாருன்னு உன்கிட்ட இதுவரைக்கும் சொல்லி இருக்கானா .. அவன் குடும்பத்தோட பின்னணி என்னவென்று சொல்லி இருக்கானா என்று அவர் கேட்க ... இல்லை என்றால் கயல் பயத்துடன் ... இப்ப தெரிஞ்சுக்க மா நான் ஆர் ஏ கம்பெனியுடைய எம்டி கோபால் .. என் பையன் அஜய் அவன் பேர்ல இருக்குற சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா ..

எனக்கெல்லாம் உன்கிட்ட இவ்வளவு இறங்கி வந்து பேசணும்னு தலையெழுத்தை கிடையாது .. ஆனால் இவ்வளவு தூரம் வந்து சொல்றேனா நீ தான் நிலைமையை புரிஞ்சுக்கணும் என்று மேலும் சில விஷயங்களை அவர் பேசி விட்டு சென்றார்... அதை தன் நண்பர்களிடம் கூறாமல் அவருடைய பையன நான் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொன்னாங்க ... நான் ஒரு சாதாரண குடும்பத்தை பொண்ணு அவங்க ஸ்டேட்டஸ் வேற அப்படின்னு எனக்கு பேசி புரிய வச்சாரு ...

அதுவும் இல்லாம ஏற்கனவே ஏதோ ஒரு பெரிய குடும்பத்தோட அவருக்கு சம்பந்தம் பேசி வச்சிருக்காங்களாம் ... அவரோட மானம் போயிடும் ... என் பையன் கிட்ட புரிய வைக்க முடியாது... அதனால் தான் உன்கிட்ட சொல்லுறேன்னு என்கிட்ட சொன்னாரு என்று பொய்யான விசயத்தை கூறிய கயல் தன் நண்பர்களை நிமிர்ந்து பார்க்க ... அவர்களோ கயலுக்கு பின் அவள் கூறுவதை அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அஜய் பார்த்தனர் ...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now