முடிவின் தொடக்கம் நீயே 💙 9

352 12 4
                                    

கயல்விழி தனது ஊரிற்கு வந்ததும் அனைத்தும் மறந்தவளாக வசந்த் கௌதமிடம் சேர்ந்து அந்த கிராமத்தை சுற்றி வந்து கொண்டிருந்தாள்... பெரியவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை எப்பொழுதும் நடக்கும் கூத்துதான் என்ற ரீதியில் இருக்க ...வசந்த் அவனது பெற்றோர்களிடம் மட்டும் மேகாவை பற்றி கூறி வைத்திருந்தான்...

மூவரும் சேர்ந்து வெளியே சுற்றி வீட்டிற்கு வரும் பொழுது கயல் வந்ததை அறிந்த மரகதம் பாட்டி அங்கு வந்து சேர்ந்தாள்... அப்புறம் படிப்பு எல்லாம் எப்படி போகுது ராசாத்தி என்று அவளிடம் கேட்க... அதெல்லாம் நல்லா போகுது பாட்டி என்றால்... கௌதமோ எங்கு படிக்கிறா அடிக்கிற பீட்டுக்கு ஏதோ கொஞ்சம் மார்க் வருது என்றான்... டேய் பால் சாமி வாய மூடிட்டு இருடா என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக ...

அண்ணனிடம் மரியாதை குறைவாக பேசினால் பாட்டி அதற்கு ஒரு கதை சொல்லி கழுத்தை அறுப்பாள் என்று தெரிந்தவள் ...அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக பதில் அளிக்க... சரி படிப்பு எல்லாம் இருக்கட்டும் மாமனுக்கு வயசாயிட்டே போகுது... கல்யாணம் கட்டிக்கிட்டு படிக்கலாம் இல்ல என்று கேட்க... அதற்கு முன் வசந்தின் பெற்றோர் முந்திக் கொண்டனர் ...

இல்லம்மா நம்ம கயலு ரொம்ப சின்ன பிள்ளை... அப்புறம் பையனுக்கு வேற பொண்ணு ஏற்கனவே பாத்துட்டோம் என்றனர் ...பாட்டி உடனே வருத்தமாக என்கிட்ட சொல்லாம இதெல்லாம் எப்படா நடந்தது ...இந்த வீட்டுக்கு பெரிய மனுஷனுக்கு எதுக்கு இருக்கேன்... நீங்களே எல்லாம் முடிவும் எடுத்துகிறதா... ஒரு வார்த்தை கலந்து பேசுறது இல்லை என்று மரகதம் கேட்க ...

இல்ல பையன் ஆசைப்பட்டுவிட்டான் அதனால் தான் என்று தயங்கினர் ...வசந்த் விரும்பிட்டியா என்று கேட்க ..ஆம் என்று தலையசைத்தான்... கயல் ஏமாந்துடுவா டா என்று சொல்ல... அவளோ சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள்... கிழவி நீ மட்டும் ஏதாவது பேசு உனக்கு பாயசம் வச்சிடுறேனீ என்று மைண்ட் வாய்ஸ் பேச...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now