முடிவின் தொடக்கம் நீயே 💙 34

453 12 6
                                    

அஜய் அறையின் கதவை தட்டி தட்டி சோர்ந்து போனார் கௌரி ... "என்ன பண்ணிட்டு இருக்கீங்க அத்தை " என்று அங்கு வந்த பூர்வி கேட்க ... "இந்த புள்ளைங்க மதியம் கூட சாப்பிட வரவே இல்லம்மா .. ரெண்டு பேரும் ரூமுக்குள்ளே தான் இருக்காங்க ... எனக்கு ரொம்ப பயமா இருக்கு " என்று வேதனையின் சாயல் முகத்தில் தெரிய கௌரி கூறியதும் பூர்வி மனது கயல் விழியை நினைத்து கலங்கியது ... அறைக்குள் செல்லவே ஏதோ சிங்கத்தின் குகைக்குள் செல்வதை போல மிரண்ட விழிகளுடன் தான் சென்றால் ...

இத்தனை பேர் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாத நிலை அவளை வருத்த என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அந்த கோவத்தை தன் அத்தையிடம் காட்டினாள்... " அதான் எல்லாரும் பேசி பேசி அந்த பொண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாச்சு.. சும்மாவே அவளை விடா மாட்டான் இப்போ சொல்லவா வேணும் ... எல்லாம் தெரிஞ்ச நம்மளும் அவளை அவன் கூட தனியா இருக்க தானே விட்டோம் ... இப்ப எதுக்கு தேவையில்லாதது பேசிகிட்டு ... " என்று தன்னை மறந்து கத்தினாள் ...

பின்னர் கௌரியின் அதிர்ந்த முகத்தை பார்த்து தன் கோபத்தை கட்டுப்படுத்தி " இது அவளோட வாழ்க்கை அத்தை .. அவங்க விரும்பி அடுத்த கட்டத்துக்கு போறதா இருந்தாலும் அது அவங்களோட தனிப்பட்ட விருப்பம்.. நாளைக்கு உங்க புள்ள சரியாகி வந்தாலும் கயலை அவன் விட்டுட்டு போக போறதில்லை... நம்மளும் அவளுக்கு துணையா தானே இருக்க போறோம்... என்ன உங்க பையன் சீக்கிரம் குணமாகி வந்தா போதும்.. அப்படி நடந்தா முதல்ல நான் கோயிலுக்கு போய் 108 முறை பிரகாரத்தை சுற்றி வரேன்.. "

"கயல் தைரியமான பொண்ணு .. அவ எல்லாத்தையும் பாத்துப்பா.. நானும் அவளுக்கு துணையாக இருக்கேன்.. நீங்க போய் படுங்க " என்று அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தவள் அஜையின் அறை கதவை பார்த்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னறைக்கு சென்றாள்.. அவன் கோமாவில் இருந்து விழித்த பின் அம்மு அம்மு என்று கத்திய போதெல்லாம் கயலை அழைத்து வந்து அவனிடம் சமாதானமாக பேச சொல்லலாம் என்று நிறைய முறை பூர்வி தன் வீட்டில் உள்ளவர்களிடம் கூறி இருந்தால்..

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now