முடிவின் தொடக்கம் நீயே 💙 45

300 14 0
                                    

நடுத்தெருவில் தன்னை விட்டு சென்ற கணவனை எதுவும் கூற முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் . சத்தியமாக இது என்னுடைய அஜய் இல்லை . என்னவன் என்னை வார்த்தையால் கூட துன்புறுத்த மாட்டேனே என உள்ளம் குமுரியது அவளுக்கு . அழக்கூடாது அழக்கூடாது என அவள் மனம் எடுத்த உறுதி எல்லாம் உடைத்தெறிந்து கொண்டிருந்தான் அஜய் .

அஜய் வார்த்தைகளால் சிலையாக நின்று கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை . அவனது வீட்டிற்கு செல்லவும் மனம் இல்லை . மனம் ரணப்பட்டு போயிருக்க தன் தாய் தந்தையின் முகத்தை பார்த்தால் நன்றாக இருக்கும் என தன் வீட்டிற்கு கிளம்பி சென்றாள் . சிறிது தூரம் நடந்து சென்று பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளுக்கு கண்ணீர் மட்டுமே துணையாக இருந்தது .

ஆட்டோவில் வந்து இறங்கிய மகளை கீதா மோகன் வித்தியாசமாக பார்த்தனர் . இந்த இடைப்பட்ட நாட்களில் கயல் வந்து சென்றாள் தான் . அதுவும் ராகுல் அவளுக்காக ஏற்பாடு செய்திருந்த காரில் மட்டுமே . அதுவும் அஜய் குத்தல் பேச்சில் காரை ஒதுக்கி விட்டாள் . "என்ன ஆச்சு மா தனியா வந்திருக்க . அதுவும் ஆட்டோல . ஏதாவது பிரச்சனையா " தாய் மனம் பதறியபடி கேட்க "இல்லம்மா வேலை விஷயமா வெளியே போயிருந்தேன் . அப்படியே உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்" என்று அழகாக பொய் கூறியவள் சௌந்தர்யாவை தேடி சென்றாள் .

"என்ன அண்ணியாரே நீங்க எப்போ நல்ல செய்தி சொல்ல போறீங்க" என்ற நாத்தனார் சிண்டலுக்கு பதில் கூறாமல் அவள் கன்னத்தை பிடித்து கிள்ளியவள் "சீக்கிரமா சொல்லிட்டா போச்சு " என இருவரும் பேச ஆரம்பித்து விட்டனர் . கயலும் பேச்சில் ஒன்றிவிட்டாள் . சௌந்தர்யா கௌதம் இருவரும் அடிக்கடி அவளை அஜய் வீட்டிற்கு சென்று பார்த்து கொண்டு தான் வந்தனர் . குட்டி நாத்தனார் மீது சௌந்தர்யாவுக்கு பிரியம் அதிகம் . அஜய் கண்ணில் அவர்கள் படாமல் பேசி விரைவாக அனுப்பி விடுவாள் கயல் . அவர்களுக்கு முன் எதாவது பேசிவிடுவானோ என்ற பயம் தான் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now