முடிவின் தொடக்கம் நீயே 💙 7

364 14 0
                                    

அஜய் அவர்களிடம் கூறியது போல தினமும் கல்லூரி விட்டதும் ஒரு மணி நேரம் அவர்களுக்கு தன்னால் முடிந்ததை சொல்லிக் கொடுத்தான் ...ஐந்து பேரும் அவனது வாத்தியார் அவதாரத்தில் விழி பிதுங்கி தான் இருந்தனர் ...அதுவும் கண்டிப்பான வாத்தியார் அவன்.... ஐந்து பேரும் முதல் நாள் அமைதியாக இருந்தார்கள் இரண்டாம் நாள் அவர்கள் சேட்டையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்...

எனக்கு அது புரியவே இல்லை அதை சொல்லுங்க இதை சொல்லுங்க என்று அவன் திசை திருப்ப ...அவர்களை புரிந்து கொண்டவன் அவர்கள் கேட்க முடியாத அளவிற்கு ஈசியாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான் ...இருந்தாலும் கடலை முத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான் பா என்று பாலாஜி கூற... டேய் கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருங்கடா என்று அஜய் கூறியதும் வாய மூடிக்கொண்டான்...

எங்களுக்கு பேசாமல் இருப்பது ஏதோ ஊமையானது மாதிரியே பீல் ஆவுது என்று வினோத் சொன்னதும்... நீ எல்லாம் ஊமையாகவே பிறந்திருக்கலாம் வாய மூடு இல்லை பேச வாய் இருக்காதுடா என்றான் குச்சியை எடுத்து அவனிடம் நீட்டிய படி...

மதன் இவர்கள் அலப்பறைகளை ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ...சீனியர் இன்னைக்கு போதும் சீனியர் இரண்டு வாரமா போட்டு எங்கள வாட்டி எடுக்குறீங்க.. கொஞ்சம் ரெஸ்ட் இல்லையா எங்களுக்கு என்று வினோத் கேட்க... செமஸ்டர் எக்ஸாம் நெருங்கிட்டு இருக்கு இன்னும் ஆறு மாசம் தான் உங்க கூட நான் இருப்பேன்...

அதுக்கப்புறம் எவ்வளவு வேணாலும் சந்தோஷமா இருங்க ...இப்போதைக்கு படிப்பை கவனிங்க என்று அவன் கூறியதும் ...ஆறு மாசத்துக்கு அப்புறம் நீங்க எங்களை பார்க்கவே வர மாட்டீங்களா என்று பிரபா கேட்டாள்... உங்கள பாக்காம என்னால இருக்க முடியாது என்று கயலை வருத்தமாக பார்த்தவாறு கூறினான் ...

எங்களையா பாக்காம உங்களால இருக்கவே முடியாது என்ற ராகம் போல இழுத்து லாவண்யா கூற... அஜய் சிரித்துக் கொண்டே பேச்ச மாத்தாதீங்க பாடத்துக்கு வாங்க என்றான் ..உண்மையாகவே அஜய் அவர்களுக்கு நன்றாக சொல்லிக் கொடுத்தான்... வகுப்பில் சுட்டியாக இருந்தாலும் அவனிடம் அடங்கிப் போய் தான் இருந்தார்கள்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Onde histórias criam vida. Descubra agora