முடிவின் தொடக்கம் நீயே 💙 ‌58

370 11 3
                                    

கயல்விழி தன் வீட்டிற்கு வந்தவுடன் அறைக்குள் நுழைந்து அமைதியாக அமர்ந்து விட்டாள் . அவள் வந்ததும் பின்னாலே மதன் பிரபா வினோத் பாலா வந்துவிட்டனர் . அனைவரும் அவளை தவிப்பாய் பார்த்துக் கொண்டு நிற்க " நான் எதுவும் பண்ணிக்க மாட்டேன் . என் மேல நம்பிக்கை வச்சு எல்லாரும் என்னை கொஞ்சம் தனியா விடுங்க " என்றாள் .

செல்வதற்கு மனமே இல்லை என்றாலும் அவளுக்கு இப்போது தனிமை கொஞ்சம் தேவை என்று அங்கிருந்து விலகி சென்றனர் . அவர்கள் சென்ற அடுத்த நொடியே தேக்கி வைத்த கண்ணீரை எல்லாம் கொட்டி அழ ஆரம்பித்தாள் கயல் . ஒருவனை கொலை செய்துவிட்டு அவன் சவப்பட்டியின் மேல் பூக்களை வைத்து மன்னித்துக் கொள்ளுங்கள் என்பதை போல் இருந்தது அஜயின் செயல் .

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினான் . அவனுக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்றாலும் எப்படி இந்த அளவு அவதூராக பேசத் தோன்றியது . யார் என்ன கூறினாலும் அவனுக்கு சொந்தமாக யோசிக்கும் திறன் கூட இல்லையா . அவள் பார்த்தவரை அஜய் அப்படிப்பட்டவன் கிடையாது . கல்லூரியில் படிக்கும் போது அவன் பிடிவாத குணத்தை பார்த்து இருக்கிறாளு தவிர எந்த பெண்ணையும் தவறாக பேசியதோ நடத்தியதோ இல்லை .

தன்னிடம் மட்டும் எதற்காக இப்படி மிருகம் போல நடந்து கொண்டான் . காதலித்த இதயம் எப்படி அதே பெண்ணை துன்புறுத்த முடியும் என்று யோசித்து அன்று முழுவதும் அழுது கொண்டே இருந்தாள் . அஜையும் அவளை நினைத்து அவர்கள் இருவரும் இருந்த அறையில் தரையில் மண்டியிட்டு அழுதான் . அவனாலே அவளை பற்றி கூறியதை ஏற்க முடியவில்லை .

" மன்னிச்சுடு அம்மு . உன்னை பேசின வார்த்தை எல்லாம் ரொம்ப தப்பு தான் டி . அதுக்காக எனக்கு இப்படி ஒரு தண்டனை கொடுக்காத டி . இனிமேல் அப்படி பேச மாட்டேன் . உன்னை கைக்குள்ள வச்சு பார்த்துப்பேன் . அப்புறம் நம்ம குழந்தையையும் கஷ்டப்படுத்த மாட்டேன் . நம்ம காதல் பரிசு நம்ம குழந்தை அதை நான் மறுக்க மாட்டேன் டி . நீ இல்லாத கொஞ்ச நாள்ல நான் நானாவே இல்லை அம்மு . பைத்தியம் ஆயிட்டேன் டி . முன்னாடி நான் இருந்தது பைத்தியம் இல்லை இப்பொ தான் பைத்தியம் ஆகிட்டேன் . "

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now