முடிவின் தொடக்கம் நீயே 💙 30

340 10 2
                                    

" அம்முஊ .. அம்முஊஊஊ " என்று அஜய் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்க அவனிடம் இருந்து விடுபட முடியாமல் தவித்தாள் கயல் ... அழுகையுடன் "வலிக்குது அஜய் கொஞ்சம் விடுங்க" என்று கூற "உன்னை விட்டா நான் செத்துடுவேன் அம்மு ... இவ்வளவு நாள் நீ வருவன்னு சொல்லி எல்லாரும் நீ ஏமாத்துனாங்க... நீ ஏன் என்னை பார்க்க வரவே இல்லை... என்னை உனக்கு உண்மையாவே பிடிக்கலையா அம்முஊஊ" என்று குழந்தை போல் கண்ணில் அழுகையுடன் கேட்டான் அஜய்..

முரட்டுத்தனமாக எப்போதும் ஒரு கம்பீரத்துடன் வலம் வருபவன் குழந்தை போல் கேட்கவும் அவன் செய்கையில் அதிர்ந்து மதனை பார்த்தால் கயல்... "இங்கிருந்து போயிரு கயல்.. நீ பாக்குற அஜய் உண்மை இல்லை .. போ " என்று அவளை அனுப்புவதில் குறியாக இருந்தான் மதன் ... "அவ ஏன் இங்கிருந்து போகணும் .. அவ என்னோடே அம்மு.. எனக்கு சொந்தமானவ .. அவளை இங்கிருந்து போக சொல்ற உரிமை உனக்கு எப்போதுமே கிடையாது.. இன்னொரு தடவை அவளை போ-ன்னு சொன்னா உன்னை கொலை பண்ணிடுவேன் டா" என்று கர்ஜனையுடன் மதனின் சட்டையை பிடித்து அடிக்க கை ஓங்கினான் அஜய்...

ராகுல் அஜயை பாய்ந்து தடுத்தான்... தம்பியின் நிலை அவனை மிகவும் பாதித்திருந்தது.. " இல்ல அஜய் உன் அம்முவை யாரும் பிரிக்க மாட்டாங்க.. இது ரோடு அஜய் .. எல்லாரும் உன்னோட அம்மு தான் தப்பா சொல்லுவாங்க .. அது பரவாயில்லையா "என்று கூறியதும் "இல்ல என் அம்முவை யாரும் தப்பா சொல்லக்கூடாது" என்று அவளை கைவளைவில் கொண்டு வந்தான் .. பருந்திடம் இருந்து தன் கோழி குஞ்சை பாதுகாப்பது போல அவன் பரந்த கரத்தில் அவளை வளைத்து பிடித்திருந்தான்...

"என்னதான் நடக்குது மதன் அண்ணா .. இவரை பத்தி ஏன் மறச்சிங்க .. அவரு ஏன் இப்படி நடந்துக்குறாரு ... " என்று இயலாமையாக கயல் கேட்க ... "எது பேசுறதா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசலாம் மா .. இங்க வேண்டாமே" என்றான் ராகுல் கெஞ்சுதலாய்.. அவனிடம் மறுக்க முடியாமல் சரி என்று தலையசைத்தாள் கயல் ... அவளை உடும்பாக பிடித்தபடி நடந்தான் அஜய் .. காரில் அவள் மடியில் ஏறாத குறையாக அஜய் கயல் அருகில் அமர்ந்திருந்தான்..

முடிவின் தொடக்கம் நீயே 💙 Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ