முடிவின் தொடக்கம் நீயே 💙 50

305 11 3
                                    

கயல்விழி மாடியில் இருந்து தவறி விழுந்ததும் அனைவரும் பதறியபடி அவளை மருத்துவ மனைக்கு தூக்கி வந்திருந்தனர் . அவளை தன்னால் காப்பாற்ற முடியவில்லை என மனமுடைந்த அஜய் அதீத மன உளைச்சலில் மூக்கில் ரத்தம் வழிய மயங்கி விழுந்து விட்டான். ஏற்கனவே கயல்விழிக்கும் குழந்தைக்கும் என்ன நேர்ந்தது எனக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த மற்ற அனைவரும் அஜய் விழுந்ததும் மேலும் அதிர்ந்து போயினர் .

அவனை வேறு ஒரு அறையில் அனுமதித்து டாக்டர் பரிசோதித்தார் . "அதிகமாக யோசித்ததால் மூக்கில் ரத்தம் வந்துள்ளது . வேறு எதுவும் இல்லை சீக்கிரம் எழுந்து விடுவார்" என்று டாக்டர் கூறி சென்று விட்டார் . கயல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் . தலையில் சற்று பலமாக அடிபட்டிருப்பதால் எட்டு தையல் போட்டிருந்தனர் . குழந்தைக்கும் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் கீழே விழுந்ததில் முதுகில் மட்டும் சற்று அடிபட்டிருக்கிறது. ஓய்வு வேண்டும் எனக் கூறி விட்டனர் . மயக்க மருந்து கொடுத்திருந்ததால் அவள் விழிக்கு ஆறு மணி நேரமாவது ஆகும் எனக்கு கூறினர் .

அதற்கு முன் அஜய் விழித்து விட்டான் . எழுந்ததும் " கயல் " என்று பரிதவிப்புடன் கேட்க "சாகலை . நல்லா இருக்கா" என எரிச்சலுடன் கூறிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் பூர்வி . "நான் போய் கயல் கூட இருக்கேன் நீங்களே இங்கே இருங்க" என கோபத்துடன் வெளியே சென்றும் விட்டாள் . அஜய் மேல் அவளுக்கு விருப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது ‌. கணவனின் தம்பி என்றோ தன் தம்பியின் நண்பன் என்றோ பாராமல் தன்னுடைய மகன் போல் அவனை பார்த்துக் கொண்டாள் . ஆனால் இப்படி மனித தன்மை இல்லாமல் நடந்து கொள்வான் என அவள் நினைக்கவில்லை .

கயல் எப்போது விழிப்பாள் என அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர் . ஆறு மணி நேரத்திற்கும் மேல் கழித்து தான் விழித்தாள் . ஏன் எழுந்தோம் முழுமையாக வெறுமையுடன் வாழ்க்கையே வெறுத்துப் போய் காணப்பட்டாள் . கௌரி அவள் கையை பிடித்து "நானே இன்னைக்கு உன் முகத்தை பார்த்து கண்ணு வச்சுட்டேன் போல . பிள்ளைக்கு கண்ணு பட்டு போச்சு " என அழுதார் . ராகுல் பூர்வீ இருவரும் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூற கோபாலு வாடியக் கொடி போல் கிடந்த மருமகளை பாவமாக பார்த்தார் . அஜய் மேல் அவருக்கும் அதிக கோபம் இருந்தது . ஆனால் காட்டுமிடம் இதுவல்ல என அமைதியாக இருந்தார் .

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now