முடிவின் தொடக்கம் நீயே 💙 1

2.7K 25 3
                                    

அந்தக் கல்லூரி பரபரப்பாக இருந்தது விடுமுறை முடிந்து இன்று தான் திறக்கப்பட அதனாலோ என்னமோ வாட்ச்மேன் மிகவும் சுறுசுறுப்புடன் அனைவரது ஐடி கார்டுகளை பரிசோதித்துவிட்டு உள்ளே அனுமதித்தார் ... இங்கே நம் நாயகியும் பரபரப்புடன் பேருந்தை விட்டு இறங்கி அவளது வாட்ச்சை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தால்.... ஐந்தரை அடியில் ஆளை மயக்கும் தோற்றத்தில் தன் முகத்தில் முன் விழுந்த முடியை ஒதுக்கி கொண்டு வேகமாக ஓடினாள்....

  நீண்ட விடுமுறைக்கு பின் தனது தோழிகளை பார்ப்பதாலும் என்னமோ வேகமாக உள்ளே நுழைந்தவள் எதிரே ஒருவனை இடித்து விட்டால்... சாரி சாரி என்று படபடப்புடன் மன்னிப்பு கோரிய அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமலே புத்தகத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டு பேகை மறு கையில் பிடித்துக்கொண்டு ஓட்டமாக ஓடி விட்டாள்...

ஆனால் அவள் இடித்தவனோ ஓடும்  அவளை ரசித்துக்கொண்டே நண்பர்கள் நோக்கி சென்றான்... பிரம்மை பிடித்தவன் போல் வருபவனை பார்த்தவர்கள்...  டேய் அஜய்  என்னடா ஆச்சு உனக்கு இப்படி வர என்று கவின் கேட்க... எங்க அம்மா காலைல சொன்னாங்க டா தேவதைகளுக்கு இறக்கைகள் இருக்கனும் அப்படின்னு... ஆனால் இறக்கை இல்லாத ஒரு தேவதையை இப்பதாண்டா பார்த்துட்டு வரேன்... அவ கண்ணு பட்டாம்பூச்சி போல படபட-ன்னு அடிச்சிட்டு இருந்துச்சு பாரு ...ஹப்பா இரண்டு கண்ணு பத்தாது டா என்று வர்ணனையாக  கூறும் நண்பனை இவனா இப்படி என்ற ரீதியில் பார்த்தார்கள்...

காரணம் எத்தனை ஆண் நண்பர்கள் அவனுக்கு இருந்தாலும் ஒரு பெண்ணை கூட அவன் நட்பாக ஏற்றதில்லை ...ஏன் வகுப்பிலும் சரி வெளியிலும் சரி தன் நண்பர்கள் யாரையாவது சைட் அடித்து கிண்டல் செய்தாலும் அதில் பங்கு கொள்ள மாட்டான்... இவன் இப்படிக் கூறுவதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்... அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அன்றைய நாளிற்கான கல்லூரி மணி அடிக்க அவரவர் வகுப்பிற்கு சென்று விட்டனர்...

வகுப்பிற்கு சென்றாலும் அவன் அவனுடைய தேவதையைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க... அவன் தேவதையோ நேரமாகி விட்டதால் நேராக வகுப்பறைக்கு சென்றால்... அவளது தோழிகள் அவளை முறைத்துக் கொண்டு நிற்க சாரிப்பா டைம் ஆயிடுச்சு என்று கெஞ்சிக் கொண்டு வந்தாள்...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now