தேடல்-64

318 12 3
                                    


கையில் பிளாஸ்க் உடன் நுழைந்த ஜானு,"அம்ரூ உனக்கு ஒரு விஷயம் தெரியுமா...!உன்கிட்ட ஒருத்தன் வம்பு பண்ணான்ல ... அவன் இந்த ஹாஸ்பிடல டாக்டர் போல டி...!! அதான் தைரியமா.. உள்ள வந்து பிரச்சினை பண்ணிருக்கான்...!பாரேன்.. இப்பலாம் டாக்டரையே கூடம் நம்ப முடியலை..!"

அம்ரூ,"எனக்கு தான் தெரியுமே!!"

ஜானு,"அடிப்பாவி...!அதான் எதும் பிரச்சினை பண்ண வேணான்னு சொன்னீயா..!!"

அம்ரூ,"அது இருக்கட்டும் ..!நீ எங்க பார்த்த அவரை!!"

ஜானு,"காலையில வர சொன்னாங்கன்னு போனேன்ல, அம்மாக்கு மாத்திரை வாங்கதான் போனேன்...!அங்க பார்த்தா...! பெரிய கியூ..! அப்போதான் பார்த்தேன் !!வெள்ளை கோர்ட் ,ஸ்தெஸ்கோப் போட்டு யாருக்கிட்டையோ பேசிட்டு போனான்..!இப்போ வரும் போது பார்க்கறேன்!பயங்கரமா..!யாருக்கிட்டையோ சத்தம் போட்டுட்டு இருக்கான்!!சரியான பிரச்சினை பிடிச்ச ஆளாதான் இருப்பான் போல!!" என்றபடி ஜுஸை பிழைய
உள்ளே நுழைந்தான் கிரண்.

அம்ரூ,"வாங்க...! கிரண்!! "

கிரண்,"சாப்பிட்டீங்களா...! அம்ரூ!!"

அம்ரூ,"ஆச்சு...!கிரண்..தாத்தாலாம் வந்தாங்க..!இன்னிக்கு !!..என்ன ஏதோ சந்தோஷமா..!குதிச்சிட்டு இருக்கமாறி தெரியுது!!"

அதற்குள் ஜானு,"என்ன எப்பவும் காலையிலே வருவீங்க!!இன்னிக்கு இப்போ தான் வரீங்க...!!!"

கிரண்,"முக்கியமான வேலையா!!
வெளிய போயிருந்தேன் அம்ரூ!!"

ஜானு,"இங்க வரதை விட முக்கியமான ...வேலை போலருக்கு!!"
என்றவளை அதட்டிய அம்ரூ,"அவ இப்படி தான் எதாவது பேசிட்டு இருப்பா...!! போன வேலை நல்லபடியா முடிஞ்சுதா..!கிரண்!"

கிரண்,"ரொம்ப சந்தோஷமான விஷயம் அம்ரூ!!அதான் நேரே வீட்டுக்கு கூடம் போகாம இங்க வந்தேன்!!"

ஜானு,"அதான பாத்தேன்!!"

ஆர்வமான அம்ரூ,"ஷானுவா..!!?"

கிரண்,"ஏன் அம்ரூ...!!அதெல்லாம் இல்ல !!இது வேற விஷயமா!!"

புரிந்தவள் போல அம்ரூ,"அவரு ரூம்ல இல்லையா!!?"

இராமன் தேடிய கண்கள்On viuen les histories. Descobreix ara