தேடல்-51

320 15 1
                                    

விடியக்காலை பனி சூழ்ந்த டெல்லி,தாத்தாவும் மஞ்சு பாட்டியும் பேசியபடி தோட்டத்துபக்கம் செல்ல ,அங்கே அமர்ந்திருந்தான் ராமன்.

பாட்டி,"ராமு.... இவ்வளவு காலையில இந்த பனியில இங்க என்ன பா... பண்ற!!?"

ராம் மெல்ல எழுந்தபடி,"சும்மா.. தான் பாட்டி!!?....இந்த பனியில நீங்க இரண்டு பேரும் ...இங்க ஏன் வந்தீங்க!!? "

பாட்டி,"எங்களுக்கு தூக்கமே வரலை...!!, நானும் பனியா இருக்குனு சொல்லிட்டேன் பா...,தாத்தா தான் இங்க வரனுன்னு அடம்...!!"என்று அவரை நோக்க

வேணு,"உன்னைய பார்க்க தான் வந்தேன் .. பா!!நீ இங்க தான் இருப்பனு தோணுச்சு அதான்!!".

அச்சமயம் கிரண்,"எனக்கும் அதே தான் தோணுச்சி...வந்தேன் !!எல்லாருமே இருக்கீங்க!!"
என்றபடி வந்து நிற்க

மஞ்சு,"சரியா !!போச்சி..., எல்லாருக்கும் காலையிலே என்னமோ ஆகிடுச்சி!!" என்று முடிப்பதற்குள் கிஷோர் வந்து நிற்க

பாட்டி,"என்ன நடக்குது இங்க!!?"

கிரண்,"நான் தான் பாட்டி வர சொன்னேன்!!"

சுதாரித்த தாத்தா,"மஞ்சு நீ போயி எல்லாருக்கும் காபி கொண்டு வாயேன்!!" என்று அனுப்பி வைக்க அவர் நகர்ந்ததும் கிரணை நோக்கிய தாத்தா ,"இப்ப சொல்லுங்க பா... என்ன பிரச்சினை!!"

கிரண்," இதோ ... நிக்குறானே!! அவன் தான் பிரச்சினை தாத்தா!!!? அன்னிக்கு நடந்த சண்டைக்கு அப்புறம் எல்லாருமே மாறிட்டாங்க!! இவனை தவிற!! எல்லாம் ஒழுங்கா பிரச்சினையே இல்லாம...சொல்ல போனா சந்தோஷமா இருக்காங்க!! ஆனா இவன் மட்டும்... நாளுக்கு நாள் ரொம்ப மோசமா ஆகிட்டு இருக்கான்!! என்ன பிரச்சினை னு கேட்டா சொல்லறுது இல்ல ... எப்பாறு இங்க வந்து உட்கார்ந்து இருக்கான்!!சாப்பிட கூடம் இல்லைனு சுப்பண்ணா வே வருத்த படுறாறு!! ஹாஸ்பிட்டல் போறாதே இல்ல ... ,என்ன நினைச்சிட்டு இதெல்லாம் பண்ணுறானு நீங்க ரெண்டு பேரும் தான் கேட்கனும்!! அதுக்கு தான் தாத்தா, வர சொன்னேன் !!"என்று முடிக்க அசையாமல் சிலையென நின்றிருந்தான் ராமன்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now