தேடல்-12

317 16 0
                                    

      தயங்கிய கால்கள் முன்னேவும் செல்லாது!!! ,திரும்பியும் செல்லாது அங்கேயே நின்றுபோனது!!!. அவளுக்கு என்ன ஆனா நமக்கு என்ன கூறும் மூளையும்,என்ன பண்ணுதோ!! என்ற மனமும் சண்டையிட விழித்து நின்று கொண்டிருந்தான் ராம்.கடைசியில் ஒரு டாக்டர் அப்படியே விட்ட நல்லா இருக்காது என்று மனத்தை தேற்றி கதவை தட்ட கண்களை கசக்கியபடியே பாதி கதவை திறந்தாள் அமிர்தா.

ராமை கண்டதும் ஒன்றும் புரியாமல்
திகைத்தவள், என்ன வேணும் என்பது போல் பார்க்க இவன் தயங்கியபடி, "சாரி!!இப்போ தான் கீழ சொன்னாங்க, உனக்கு உடம்பு சரியில்லையென்று!!இது தெரியாம நான் உன்கிட்ட கத்திட்டேன்"என்று இழுக்க "பராவயில்லை" என்று கூறி கதவை சார்த்த  முற்ப்பட்டவளை தடுத்தவன்,"என்ன ?பண்ணுது அமிர்தா, என்ன சாப்பிட்ட மதியம்?" என்று கணிவாக விசாரித்தவனை கண்டவள் கதவை திறந்து வெளியே வந்து, "தெரியலை", வயிறு வலிக்குது , வாந்தி வருகிற மாறி இருக்கு ஆனா வரலை என நெற்றியை தடவி கொண்டு சொல்ல,வேற என்ன பண்ணுது என்றான் அவளை உற்று நோக்கியபடி.

சாயங்காலம் தலை வலி இருத்துச்சி, இப்போ பரவாயில்லை.சரிசரி!! இரு சாப்பிட்டது தான் ஏதோ ஒத்துகலை  என்று கூறி கொண்டே தன் அறையில் நுழைந்தவன் கையில் தண்ணீர் பாட்டில் மாத்திரையுடன் வெளியே வந்தான்.இந்த இத போடு காலையில சரியாகிடும் என்று நீட்டினான்.கையில் வாங்கி மாத்திரையை போட்டவள்,"தேங்கஸ்" என்று பாட்டிலை நீட்ட ,படி ஏறி வந்த கிரண் இருவரையும் பார்த்துவிட்டு அருகில் வந்தான்.
  "என்னாச்சு அமிர்தா? ஏன் ரொம்ப பலகீனம் தெரியறீங்க என்று அக்கறையுடன் கேட்டவனுக்கு பதில் ராமன் சொல்ல ,பார்த்தீங்களா நான் சொன்னது சரியா போச்சா இப்படி பலகீனமா வெளிய போயி என்ன பண்ணுவீங்க ,பேசாம ஒழுங்க இங்கேயே இருங்க பேக் கிடைக்கிற வரையும் சரியா என்றான் மிரட்டலாக.
நினைவு வந்தவளாய் ,"ஆமாம் எதாவது சொன்னாங்களா"என்றாள் ஆர்வமுடன். சொன்னா சொல்ல மாட்டனா அமிர்தா!!,சும்மா.. சும்மா.. கேட்க முடியாது அமிர்தா ,அவங்க விசாரிச்சிட்டுதான் இருக்காங்க உங்க பேக்க்கு நான் பொறுப்பு நீங்க நிம்மதியா தூங்குங்க நாளைக்கு கோயிலுக்கு வேற போகனும். தலைவலியோட வர கூடாது என்றான் புன்முறுவலுடன்.

நானா!!நான் எதுக்கு கிரண் நீங்க குடும்பமா போகறீங்க!!நான் என்ன பண்ண போறேன் அங்க வந்து. "ஆமாம்...இங்க இருந்து என்ன பண்ண போகிற"  என்று நினைத்துக் கொண்டான் ராம்.

கிரண்,"அமிர்தா ,அம்மா நீங்க இவன் கல்யாணத்துக்காக என்கூட இங்க இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்கன்னு எல்லாகிட்டையும்  சொல்லிருங்காக ,நாளைக்கு வரலைன்னா என்ன காரணம் சொல்லறது நீங்களே சொல்லுங்க, அதோட நாளைக்கு குருஜி மித்ரேஜன் னோட உபதேசம் நடக்க போகுதாம். நல்லாருக்கும் வாங்க!!,உங்களுக்கும் புதுசா இருக்கும். என்றான் கண்டிப்புடன்.
சரி!!! என்று தலையாட்ட புன்முறுவலுடன் சென்றான் கிரண். "நான் சொன்னா என்னான்னு கூட கேட்க மாட்டா ,அவன் சொன்னதும் பாரு மண்டைய ஆட்டுகிரத என்று நினைத்து கொண்ட ராம்".

அமிர்தா ,சுப்பண்ணா கிட்ட நான் சூட தண்ணீ கொண்டு வர சொல்லுகிறேன் குடிச்சிட்டு படு என்று நகர்ந்தான் ராம்.

காலைப்பொழுது நேற்றை விடவும் பரபரப்புடன் காணப்பட்டது. அங்காங்கே அவள் காண புதுமுகங்கள் தென்பட்டன.அமிர்தா சட்டென்று உள்ளே சென்று குளித்திட்விட்டு தான் காய வைத்து வைத்திருந்த தன் துணிகளை அணிந்து கொண்டு இறங்க மோகன் எதிர்பட தயங்கி நின்றனர் இருவரும்.வணக்கம் வைத்த அமிர்தாவிடம்,நீங்க?.. என்று இழுத்தவர்" என்பெயர் அமிர்தா !!நான் ..என்பதற்குள் இறங்கி வந்த கிரண், வாங்க..வாங்க!!! எப்போ வந்தீங்க சித்தாப்பா!! என்று இடைப்பட்டான் கிரண். "அட மேஜர் நீங்க  எப்போ வந்தீங்க !!ஒரு தகவலுமே இல்லை என்று புன்னகையுடன் கட்டி தழுவினார் மோகன். நான் நேத்து வந்தேன்ப்பா, எங்க கீதா சித்தி, ஷயாம், மனோஜ் லாம் என்று கேட்டு கொண்டே எட்டி பார்த்தான் கிரண்.உன் சித்தி கீழ சமையல் அறையில இருக்கா!! ஷயாமுக்கு கடைசி செமஸ்டர், மனோஜூக்கு ஸ்கூல் ஏதோ   ப்ரோகிரம் டா அவன் தான் ஆரேஜ்மெண்டெல்லாம் அதான் வரலை என்று முடிக்க ஏதோ சொல்லீறிங்க பாட்டி கத்த போறாங்க போங்க !!என்றவன் மோகன் கண்காட்டவும் ,இவங்க என் பிரெண்ட் சித்தப்பா!!இங்க ஒரு வேலையா வந்தாங்க தங்கறதுக்கு ஏன் வெளிய போனும் இங்கதான் ராம் கல்யாணம் வேறல்ல அதான் இங்கேயே கூட்டிட்டு வந்துட்டேன் என்னும் போது அமிர்தாவும் மோகனும் பார்த்து புன்னகை செய்தனர். அமிர்தா சட்டென்று கீழே இறங்க தடுமாறியவளை தாங்கி பிடித்தான் ராமன்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now