தேடல்-18

276 20 0
                                    

     இன்று நான் பொழிந்தே தீருவேன் என மழை முனைப்புடன் செயல்பட உணவறிந்திய மூவரும் வானத்தை பார்த்து கொண்டிருந்தனர். "பனித்துளி பனித்துளி வந்து ..." என்று செல்லின் அழைப்பை ராம் எடுக்க திடக்கிட்டு நோக்கினாள் அம்ரூ..ராம் பேசி முடித்தவுடன் கிரணும் அம்ரூவும் ராமையே பார்க்க,என்ன என்ற பாவனையில் கேட்டான் .இல்ல போன் என்ற கிரணிடம் தாத்தா டா.. மழை விட்டுச்சா.. பாப்பா முழிச்சிட்டு இருக்களான்னு கேட்டாரு என்றான் ராம். அது சரி ...இந்த காலர்டியூன் ... என்று இழுத்தவனிடம்... நேத்தி கேட்டேன் நல்ல இருந்துச்சி வச்சேன் ஏன் என்றவனிடம்... அம்ரூ வோட போன் காண போச்சி ல அவங்களும் இதே தான் வச்சிருந்தாங்க..என்றான் கிரண். ஓஓ அப்படியா.. என்றவன் அவளை கவனியாது ... சரி கிரண் நம்ம கிளம்பலாம்... நேரம் ஆகிட்டே இருக்கு மழை விடாது போல இருக்கு நாளைக்கு எனக்கு முக்கியமா ஹாஸ்பிடல சர்ஜரி இருக்கு கிளம்பலாமா என்றவனுக்கு தலை அசைத்து மூவரும் கிளம்பலாகினர். கார் ஏறும் முன் கிரண் ராமனை பின்னே அமர சொன்னான்.நாளைக்கு முக்கியமான சர்ஜரினு சொல்லுற நீ பின்னாடி தூங்கிட்டு வா என்றவன் வண்டியை கிளப்ப ஸ்ருதியுடன் அம்ரூவும் பின்னே அமர்ந்திருந்தாள்.

     சற்று தூரத்தில் மழை ஓய நிலவோளியை ரசித்திருந்த அம்ரூ கண்ணயர அந்த கண்களை ரசித்து வந்தன ராமனின் கண்கள்.வீடு வந்தடைந்ததும் ராம் மெல்ல ஸ்ருதியை அவள் மடியிலிருந்து தூக்க திடுக்கிட்டு விழித்த அம்ரூவை ..ஒன்னும் இல்ல ..நம்ம வீடு  வந்துடுச்சி இறங்கு!! என்று இறங்க ரேனு ஓடி வந்து ஸ்ருதியை வாங்கினாள்.சற்று தூக்க கலக்கத்தில் இருந்த அம்ரூ தான் இறங்குவதற்காக ராம் கதவை பிடித்திருப்பதை கவனியாது இறங்கியவுடன் சடலென்று கார் கதவை சாற்ற ராமன் இடக்கை சுண்டிவிரல் சற்று பதம்பார்க்க ...ஆஆஆ ... அவன் சத்தம்கேட்ட உள்ளே சென்ற ரேனுவும் கிரணும் வர அப்போதுதான் கவனித்த அம்ரூ சட்டென்று அவன் விரலை பிடித்தால் பதட்டத்தில்.வெடுக்கென பிடுங்கிய ராம் வேகமாக உதறலானான். என்னாச்சி??!! என்று வந்தவர்களிடம் ...ஒன்னுமில்லை வாங்க!! வாங்க!! என்று  உள்ளே சென்றான். உள்ளே பானு வந்தவர்களை சாப்பிட அழைக்க நாங்க சாப்பிட்டாச்சி என்று ஒரே எட்டில் ரூமை அடைந்தான். ஆமாம் மா!!நாங்க மூனு பேரும் வெளியே சாப்பிட்டோம் என்று அவனும் மேலேற பின்னே மெதுவாய் ஏறிய அம்ருவை வெறித்து நோக்கினாள் வர்ஷா!.அவங்க சாப்பிட்டாங்களாம்...  இப்போவாது நீ சாப்பிடறிய!! என்று பானு உள்ளே அழைத்து சென்றார். ரூம்மினுள் சென்ற அம்ரூவிற்கு மன பொறுக்க முடியாமல் தவித்தாள். ஒரு முடிவுடன் ராமின் அறையை தட்ட பாதி கதவை திறந்த ராம்,"கிரண் அந்த ரூம்லதான் இருக்கான்..இன்னைக்கும் மாத்தி தட்டற " ,என்றவன் சடலென்று கதவை சாற்றினான்.

புரியாமல் விழித்த அம்ரூ, இன்னும் கோபமாக தான் இருக்காரு என்று வேறுவழி தெரியாமல் கிரண் கதவை தட்ட உடை மாற்றி வந்தவன் அம்ரூ கலக்கமாக இருப்பதை கண்டு,என்னாச்சி அம்ரூ ஏன் இப்படி டென்ஷனா இருக்கீங்க என்று கேட்டு கொண்டே வெளிவந்தவனிடம், அம்ரூ ,"கிரண் கொஞ்சம் இந்த பக்கம் வாரீங்களா ?!!" என்று ஓரமாக அழைத்தாள்.சாப்பிட்டு மேல் வந்த வர்ஷா இதை கவனிக்க கோபமாக பின் சென்றாள். அம்ரூ கிரணிடம்,"கிரண் இன்னிக்கு எனக்கு நேரமே சரியில்லை என்றவள் நான் மறுபடியும் தெரியாம தப்பு பண்ணிட்டேன் என்று படபடக்க", என்னாச்சி சொல்லுங்க நான் பார்த்துக்குறேன் படபடக்காம சொல்லுங்க என்று கூற," கிரண் நான் கவனிக்காம ராம் கையை கார்கதவோட நசுக்கிடேன்"என்று கூற,  அச்சோ!!.. அதான் அவன் கத்தினான்.. ஆமாம் அவருக்கு நாளைக்கு ஆப்ரேஷன் இருக்கு சொன்னாரு இல்ல எனக்கு ஒன்னுமே புரியலை அவரு இன்னும் என் மேல கோபமா இருக்காரு நான் போனே கதவை வேகமா சாத்திட்டாரு என்றாள்.
சரிசரி நீங்க விடுங்க நான் பாத்துக்கிறேன் என்று திரும்ப வர்ஷா நிற்பதை பார்த்த கிரண்,எப்போ வந்த வர்ஷா என்றவனிடம்..நான் கேட்டுட்டு தான் இருந்தேன் மாமா.. ,"ராம் மாமா கை நசுக்கிட்டாங்களா!!என்று வேகமாக  கேட்க சரி சரி சத்தம் போடத எல்லாரும் டென்ஷன் ஆவாங்க நான் போயி பார்க்கிறேன்,நீ தீபி கிட்ட சொல்லி ஐஸ்பேக்கும் முதலுதவி கிட் கொண்டுவர சொல்லு என்றவன் ராமின் அறையை நோக்கி செல்ல வர்ஷா அம்ரூவை முறைத்தவாறு  கீழே  சென்றாள்.கதவை திறந்த ராம் என்னடா!! என்பதற்குள் கையை இழுத்து பிடித்தவன் கையை காட்டு எங்க வலிக்குது என்று பார்ப்பதற்குள்,மேலே வந்த மது அத்தை வெடுக்கென கையை பிடுங்கி ஏன் டா உனக்கு இந்த வேளை !!யாரு இறங்கனா உனக்கென்ன நீ ஏன் கதவை பிடிச்ச!!! பாரு எப்படி வீங்கி இருக்கு...நாளைக்கெல்லாம் எவ்வளோ வேலை இருக்கு என்று கூறியபடி வீங்கிய விரலை அழுத்த..வலி பொறுக்க முடியாமல்..ராம் அங்கு நின்றிருந்த அம்ரூவிடம் உன்கிட்ட இப்போ நான் சொன்னேனா.. எனக்கு வலிக்குதுன்னு உன் வேலையை மட்டும் பார்க்க முடியாதா என்று கத்தியவன் , எனக்கு ஒன்னும் வலிக்கலை நீங்கெல்லாம் போயி படுங்க என்று  வழக்கம் போல் சடாலேன்று கதவை சாற்றினான்.
    மதுவும் வர்ஷாவும் அவளை வெறித்தவாறு கீழ் இறங்க கிரண் கையை பிசைந்தவாறு அவன் அறையை அடைந்தான். மனம்சோர்ந்த அம்ரூ தோட்டத்தில் சென்று அந்தே கல்லில் அமர்ந்திருந்தாள்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now