தேடல்-47

243 15 1
                                    

அம்ரூ,"கிரண்... கோபமா.. போறாரே!!"

ராம்,"அவன்.. எங்க போனாலும்.. எங்கிட்ட தான் வரனும்... நான் பேசிக்குறேன்!!"

அம்ரூ,"நான் ஒன்னு கேட்கவா!!? ஏன் எதையும் யார்கிட்டயும் சொல்ல மாட்டறீங்க!!உங்க மனசுக்குள்ளே வச்சிரூக்கீங்க!!"

ராம்,"எங்க... அதெல்லாம் அப்போ... இப்போ தான் எல்லாத்தையும் உன்கிட்ட உளறிடுறேனே!!இப்போ உளறன மாறி.....!!!,....அம்மூ... இந்த வீட்டல சொல்லவும் ஆள் இல்ல..அதோட யாருக்கிட்ட சொன்னாலும் பிரச்சினையாதான் ஆகும்... எதுக்கு அப்புறம்!!"

அம்ரூ,"தாத்தா கிட்ட..."

ராம்,"தாத்தாகிட்ட சொல்லாம்.. தான்... அவருகிட்ட தான் சொல்லுவேன்.. ஆனா அதுகூடம் தப்பா போயிடுது .. அதான் எதும் இப்ப சொல்லுறது இல்ல!!"

அம்ரூ,"சரி... விடுங்க...நாளைக்கு பூஜை இருக்கு ... எதையும் யோசிக்காம போயி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க!!!" என எழுந்தவளின் கையை பிடிக்க திரும்பியவளின் முகம் நேரே எழும்பியவன் சிறிது நேரம் அவளையே உற்று பார்த்தான்.

அம்ரூ,"என்னாச்சு அதுக்குள்ள...ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரி மாறுது",என்பதற்குள் அவன் இழுத்து அணைக்க தடுமாறி போனாள் அம்ரூ.

அவனை விடுவிக்க முயன்ற அம்ரூ,
"என்ன இது... என்ன பண்றீங்க.. யாரது பார்க்க போறாங்க!! விடுங்க.."

ராம்,"அம்மூ... இரண்டு நிமிஷம் .. அப்படியே இரு!!".

சற்று அமைதியாக நிற்க அம்ரூ,"என்னாச்சு...!?"

ராம்," எனக்கு மனசு அமைதியா ஆக மாட்டுது... அம்மூ..அவளை பார்த்துலேருந்து!!,கோபமாவே இருக்கு!! நீ வந்து சொன்ன, அப்புறம் தான் என் காயமே ஞாபகம் வருது!!..., நீ பதறனது பார்க்க ,அப்படியே என் அம்மா மாறி இருந்துச்சு... நாளைக்கு வேற அம்மாக்கு தான பூஜை... இத்தனை வருஷம் ஆனாலும் கண்ணுக்குள்ளேயே இருக்காங்க டி...,என்னால தாங்க முடியலை அம்மூ...!!!"என்று கலங்கியவனை தேற்றியவள் சற்று விலக்க அம்ரூ,"அம்மா... எங்கையும் போகல... உங்ககூடவே தான் இருக்காங்க!!" என்றாள்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now