தேடல் -13

293 17 0
                                    

தாங்கி பிடித்த கைகள் தடம் பதித்தன அம்ரூவின் கைகளில், அவ்வளவு வலுவானது பிடித்தவனின் மனம்.கையை உதறியவள் நிலையாக நிற்க
அருகில் வந்த கிரண் ,"என்னாச்சு அமிர்தா? மயக்கமா இருக்கா?! உட்காருங்க!என்று வறண்டாவிலிருந்த ஷோபாவில் அழைத்து அமர வைக்க உடன் சென்ற ராமன் "சுப்பண்ணா.. சுப்பண்ணா.." என்ற கூரலுக்கு ஓடி வந்தவர்,அம்ரூவை சுற்றி மூவரும் நிற்க பதறிக் கொண்டு "என்னாச்சி தம்பி ??அம்ரூமா என்ன பன்னுது? என்று வினவ ,"தண்ணீ கொண்டு வாங்க" என்றான் ராம். இதோ !! என்று அமிர்தா அறையினுள் சென்றவள் வெந்நீர் குடுவையுடன் வெளி வந்தார். இடையில் அமிர்தா ,"ஒன்னும் இல்ல கிரண்!!,கால் தவறிடுச்சி அவ்வோளோ தான்" என்று எழுந்திருக்க முற்ப்பட கைபிடித்து அமர வைத்தவன். நான் தான் பார்த்துட்டே இருந்தேனே நாங்க பேசிட்டு இருக்கும் போதே நீங்க தடுமாறினதை ,ராம் மட்டும் பிடிக்கலைனா !!!,இந்நேரம் படிக்கட்டில் உருண்டு பயங்கரமா அடிப்பட்டு இருக்கும்.பேசாம உட்காருங்க என்பதற்குள் சுப்பு குடுவையுடன் வர கையில் வாங்கிய ராம் ,தண்ணீ அப்படியே இருப்பதை பார்த்து விட்டு,டம்ளரில் ஊற்றி கொண்டே, "நான் சூட தண்ணீயை குடிச்சிட்டு தானே,படுக்க சொன்னேன்"என்று அவளிடம் நீட்டினான்.அவள் பதில் பேசாது வாங்கி பருகி கொண்டிருந்தாள்.தம்பி!!நான் நீங்க சொன்னமாறி சுடுதண்ணீரில் மிளகும்,சீரகமும் போட்டு கொண்டு வந்து குடுத்தேன்.அதனால கொஞ்ச நேரம் கழிச்சி குடிக்க சொன்னேன், மறந்திருப்பாங்க தம்பி!!என்றார் சுப்பு.

"ஓஓ!! இவ்வளவு போட்டு குடுக்க சொன்னது இவன் தான என்று நினைத்து கொண்டாள்"

கீழிருந்து மஞ்சுபாட்டி அனைவரையும் சாப்பிட அழைக்க ,"வருகிறோம்மா " என்ற மோகன், சரிப்பா!! நீங்க பாத்து கூட்டிட்டு வாங்க நான் கீழ போகிறேன் என்று நகர்ந்தவர் உடன் சுப்புவும் இறங்க,அவர்களை தேடி மேலே வந்த தீபிகா,"அண்ணா.. இரண்டு அண்ணாவும் இங்க என்ன பண்ணீறிங்க ..பாட்டி கீழ மணியாகுது சாப்பிட்டு கிளம்பனுமுன்னு சொல்லிட்டு இருக்காங்க" என்றவள் அமிர்தாவை கண்டு என்னாச்சி இவங்களுக்கு என்று அம்ரூ அருகில் சென்று அமர்ந்தவள்."அண்ணி.."என்று நாக்கை கடித்தவள் "என்னாச்சி ?" என்று அவளை கழுத்தை தொட்டு பார்த்தாள்.கிரண் ,"தீபி அவங்களுக்கு உடம்பு முடியலை நீ கொஞ்சம் பார்த்துகோ !!எங்களை கீழ தேடறாங்க என்று திரும்பிய கிரண் ,அமிர்தா கொஞ்ச நேரம் கழிச்சி பொறுமையா எழுந்து வாங்க என்றான்.இருவரும் இறங்க பாதி படியில் திரும்பிய ராம் ,"நான் சுப்பண்ணா கிட்ட சாப்பாடு கொண்டு வர சொல்லுறேன் ,இரண்டு பேரும் இங்கேயே சாப்பிடுங்க என்ற ராமனிடம் ,"இல்ல பரவாயில்லை இப்போ எனக்கு!! நான் கீழே வரேன் என்ற அமிர்தாவை கண்டு கொள்ளாத ராம் ,தீபி கீழ சொல்லுறேன் இங்கயே சாப்பிடுங்க என்று விருட்டென்று இறங்கினான். "உட்காருங்க!! ராம் அண்ணா சொன்னா சொன்னதது தான்..மறுபேச்சே கிடையாது"என்று ஆரம்பித்தவள் சாப்பாடு வந்து முடிக்கும் வரையிலும் அம்ரூவை விடவில்லை.அம்ரூ புன்முறுவலுடன் கேட்டு கொண்டிருந்தாள் தீபியின் குழந்தை பேச்சுகளை.

கிரண் ஏறி வந்து சாப்பிட்டாச்சா கிளம்பல்லமா என்னும் வரையிலும் முடியவில்லை தீபியின் கதைகள்.பஸ் மலை மேல் உள்ள சுவாமி சன்னதியை நோக்கி போய் கொண்டிருக்க அனைவரும் அவரவர் பொருட்களை அடுக்கி வைத்தனர்.நினைவந்தவர் போல் சீதாபாட்டி,"கிரண் எல்லா பேசிட்டல நாம போயி அப்புறம் எதாவது செய்யற மாறி இருக்க போகுது"என்றார். முன் சீட்டிலிருந்து திரும்பிய கிரண்,சீது எல்லாம் குருக்கள்ட பேசிட்டேன், நாம் போறது அபிஷகம் பார்கறது, பூஜை பண்றது ,மதியம் சாப்பிட்டு உபதேசம் கேக்கறது.சாயந்திரம் கிளம்பறது அவ்வளளோதான் என்று இன்றைய பணிகளை பட்டியல் இட்டான்.சரி சரி என தலையாட்டியவர், மஞ்சு மாலை கட்ட பூ எடுத்து வச்சாச்சா!! என்றவரிடம்
அண்ணி!! எல்லாம் வச்சாச்சு அதுல நீங்க சொன்ன ஒரு பூ மட்டும் இல்ல அதான் ராமை அனுப்பிருக்கேன் அவன் வாங்கிட்டு அப்படியே மதுவை யும் பசங்களையும் கூட்டிட்டு வந்துடுவான் என்றார்.

ஓ அப்படியா எங்க வராங்களாம் என்றார் பத்துமாமா! "அத்தையும் ரேனுவும் வந்துட்டாங்க சித்தப்பா!! வர்ஷா பிளைட் லேட் போல அதான் அவளுக்குகாக அங்க காத்துட்டு இருங்காங்க என்றான் கிரண்.

அவங்க வர வேண்டியது தான அவளுக்கு எதுக்காக வெயிட் பண்ணும் அவளுக்கு வர தெரியாத அப்புறம் ஏன் எல்லாருக்கும் பஸ் வச்சிட்டு எல்லாம் தனியே காரிலியே வந்துருக்கலாம் என்றார் வேணு தாத்தா.

அவளை பத்தி தான் தெரியுமே சித்தப்பா,விடுங்க கேட்டா , எதாவது காரணம் சொல்லி,சண்டை போடுவா!!,சரி முகில் வரலையா என்றார் மேகநாதன்."அப்பா பசங்க எல்லாரும் பிஸி அடுத்த வாரம் தான் வராங்க என்று பதிலளித்தான் கிரண்.

பஸ் மலை அடிவாரத்தில் போய் நின்றது.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now