தேடல்-50

260 15 0
                                    

மேகநாதன்,"ஏன்பா... கிரண்!!,ஒரு மாசம் மேல ஆச்சு ... ,ராம் ஹாஸ்பிடல் பக்கம் வந்து !!,எப்படி இருக்கான் ,எங்க போறன்!?, எப்போ வரான்,!? ஒன்னுமே தெரியல!!! ஏதாவது விசாரிச்சுயா !!?"

கிரண்," எனக்கு ஒண்ணுமே புரியல அப்பா!! அன்னைக்கு கூடம் நல்லா இருந்தான்!! அதுக்கு அப்புறம் என்னாச்சு தெரியல!!! இப்படி தான் இருக்கான், பல்லவிக்காக....., இவ்வளவு வருத்தப்படுவானு நான் நினைக்கலை!!,தெரிஞ்சிருந்தா, நான் அப்பவே ஏதாவது பண்ணி இருப்பேன்!!!அவன்கிட்ட என்னால பேசவே முடியலை!!!".

மேகநாதன்,"அதுக்காக... அவனை இப்படியே விட்டுட முடியுமா!!என்னனு பேசு பா...!! நீதான் அவன்கிட்ட பேச முடியும்!! உன் தாத்தாவும் எதுவும் கேட்கமா அமைதியா ... இருக்காரு!!"

மோகன்,"ஆமாம் ணா...ஹாஸ்பிடல் பிரஷ்ர் தாங்க முடியலை !!!

மேகநாதன்,"வாப்பா.... மோகன் !!!,என்னாச்சு அந்த பிரச்சினை!!!"

மோகன்,"எங்க அண்ணன்!! என்னால சமாளிக்க முடியலை!!!,அவன் வராத நேரம் பார்த்துதான்...எல்லா பிரச்சினையும் ஒன்னா.... வருது!!,நம்ம லாயர் கிட்ட பேசிட்டு தான் வரேன்!!,கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேனு சொன்னாரு!!!புதுசா பல்லவி அப்பா வேற ஏதோ பிரச்சினை பண்ணுறாரு!!அதான் இங்க வந்து ராம் கிட்ட பேசலானு வந்தேன்!!".

மேகநாதன்,"இல்ல... மோகன் !!இதை பத்தி ராம் கிட்ட எதும் பேச வேண்டாம்!!!அவனே சரியாகி வரட்டும்... ,முடிச்சவரை நாமே சமாளிப்போம்....!! திரும்பியவர் கிரணிடம்,"நீ .. போயி அவனை கவனி.... ,இந்த பிரச்சினை பத்திலாம் ... அவனுக்கு தெரிய வேணாம்!!!",என்றார்.

அவனும் இணங்குவனாக ராமனை தேடி செல்ல ராமன் தோட்டத்தில் வழக்கமான அந்த கல்லின் மீது அமர்ந்திருந்தான்!!

கிரண்,"என்ன ராம்... உன்னைய உள்ளலாம் தேடிட்டு இருக்கேன்!! இங்க வந்து உட்கார்ந்து இருக்க"

ராமன் பதிலேதும் பேசாது அமைதியாக தலையசைத்தபடி நகர அருகில் அமர்ந்தான் கிரண்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now