தேடல்-45

244 14 2
                                    

     "நாமளும் அங்க போலாமா !!" என்றவனின் கையை பிடித்து நிறுத்திய கிஷோரை ஏற இறங்க பார்க்க விடுவித்தவன்.

கிஷோர்,"ராம்... இங்க என்ன நடக்குது!!! உனக்கு தெரியமா.. இல்ல... இருந்தாலும் உனக்கு ஞாபக படுத்துறேன்.. இன்னும் நாலு நாள்ல உனக்கு கல்யாணம்... உன் கல்யாணத்துக்கு வந்த பொண்ணு கிட்ட இப்படி.. நீ நடந்துக்கிறது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாவும்!! அதியசமாவும் இருக்கு!!!"என்று கேட்டு விட அவனை சற்று அமைதியாக பார்த்தவன் மறுபடி அந்த நாற்காலியில் அமர்ந்தான்.

கிஷோர் அருகில் சென்று அமர்ந்தவாறு மேலும் தொடர்ந்தான்
,"நானும் காலையிலேருந்து உன்னைய பார்த்துட்டு தான் இருக்கேன்... அப்போதான் கிரண் வந்து சொன்னா ...நீ இப்ப தான் எழுச்சிருக்க அப்படின்னு...நாங்க ரெண்டு பேரும் உடனே மேல வந்தோம்...உன் ரூம்ல இருந்து அமிர்தா வெளிய வர்றத, நாங்க பார்த்தோம், சரி ...யாருனு தெரியல.. ஏதோ கேட்க இருக்கும்முனு .. விட்டுட்டேன். அதுக்கு அப்புறம் உன்னோட முகம்.. உன்னோட பேச்சு எல்லாமே எங்க எல்லாருக்கும் வித்தியாசமா இருந்துச்சு,நீ சந்தோஷமா இருக்க அது போதும் அப்படின்னு நினைச்சோம்!!!, இருந்தாலும் இது எனக்கு தப்பா தோணுது, காலைல பார்த்தேன்.. சாப்பிடும்போது.. அமிர்தாவையே பார்த்துட்டே இருந்த....,கார்ல அமிர்தா ஏறன்னுன்னு வெயிட் பண்ண... ஏறிளனதும் முகமே மாறிடுச்சி.... எனக்கு முதல்ல புரியல...அப்புறம் அங்க அந்த பொண்ணு வந்ததும் வேற ஏதுமே உனக்கு தோணலை ... உடனே எழுச்சி வெளிய போயிட்ட... அப்போ உன் முகத்தை பாக்கனுமே, இப்போ... இப்போ....கூடம் .. வரும்போது அவ வந்ததும் உன் முகத்தில அவ்வளவு சந்தோஷம், நானும்... இருக்காது.. நீ அப்படி பண்ண மாட்டானு என்னைய சமாதனம் பண்ணேன்... ஆனா நீ  வேணும்னு அமிர்தா கிட்ட வம்பு பண்ணி,கீழே போக சொல்லி அனுப்பன... அதை விட நீ எனக்கு அவளை கூப்பிட்டது...ரொம்ப வித்தியாசமா இருந்தது,அமிர்தாவை கிரணே மரியாதையா பேசுறானே.. அவங்க பிரண்டுன்னு சொல்லிட்டு.., நான் முதலில் நம்ம காதுலதான் அம்மூன்னு விழுந்துச்சு அப்படின்னு நினைச்சேன்...  இங்கே நீ இத்தனை தடவை சொல்றதும்... சரிதான்.... சாதரணமா.. அமிர்தா கையை பிடிக்குற.. எனக்கு புரியல!!!, இங்க என்ன நடக்குது ,எனக்கு சொல்லு,என்ன நினைச்சிட்டு பண்றன்னு சொல்லு  ராம்!! என்று முடிக்க...

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now