தேடல்-25

281 16 0
                                    

                    கல்யாணவீடு கலைகட்ட ஆரம்பித்தது, பூஜைக்கு வந்த தூரத்து விருந்தினர்கள், நண்பர்கள் சிலர் அடுத்த வாரம் கல்யாணம் என்பதால் அங்கேயே தங்கினார்கள். அங்காங்கே அரட்டைகளும், பெரியவர்களின் உபசரிப்புக்களும் சிறுவர்களின் விளையாட்டுகளும் வீடே திருவிழா கோலம் பூண்டது.சுப்பண்ணாவிற்கு வேலைபளூ அதிகமாயினும் அதனை உற்சாகமாக ஏற்றார்.காலைவேளை பானு கீதா,மது அமர்ந்து அரட்டையுடன் காபி அருந்த சீதா பாட்டி சுறுசுறுப்புடன் சுற்றியவர் இவர்களை
கண்டதும்," இங்க என்ன உட்காந்து கதை !! எவ்வளவு வேளை இருக்கு !!எழுந்திருங்க!! ... " என்று கடுக்க மூவரும் முனுமுனுப்புடன் களைந்து சென்றனர்.
அமிர்தாவும் தன் பங்கிற்கு தான் ஏன் வந்தோம் ?!என்ன செய்கிறோம் ?!என்பதை மறந்து வேலைகளை இழுத்து போட்டு செய்ய ஆரம்பித்தாள்.
சுழன்று கொண்டிருந்த கிரணிடம் பாட்டி, "கிரண் ...நில்லுடா.. இந்த ராம் எங்கடா நேத்திலிருந்து காணோம். நாளைக்கு கல்யாணத்துக்கு கால் வைக்கனும் ஏங்கேயாவது போயிட போறான் .. அவன் கிட்ட சொல்லி வை... நானே சொல்லானு தேடறேன்... பிடிக்க முடியலை "என்று புலம்ப.." நான் சொல்லுறேன் பாட்டி!!  என்று நகர்ந்து சென்றான்.தீபி இப்பொழுது ஸ்ருதியின் நண்படர்களுடனும் தம்பிகளுடனுமே சுற்ற அவ்வபோது வந்து அம்ரூவை விசாரித்து சென்றாள்.இப்படியே பொழுந்து சாய அனைவரின் எண்ணங்களும் ராம் வரவையே எதிர்நோக்க ஆரம்பித்து.
மஞ்சு பாட்டி, வேணு தாத்தாவிடம் முறையிட தாத்தா, பத்து மாமா,மோகன் என அனைவரும் அலைபேசியில் தேட கிரணும் முகிலும் அலைந்து தேட சென்றனர். வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்த அம்ரூ... அனைவரும் ஹாலில் வாசலை எதிர்நோக்கியே அமர்ந்திருப்பதை கண்டு குழப்பத்தோடு தீபியின் அருகில் சென்று மெல்ல விசாரித்தாள்.
"அதுவா...அண்ணி... நாளைக்கு கல்யாணபந்தல் போடறாங்க... ஆனா ராம் அண்ணாவ நேத்திலிருந்து பிடிக்கமுடியலை அதான் டென்ஷன் எல்லாருக்கும்.. எப்பவும் இப்படிதான் ராம் அண்ணா... யாருக்கிட்டையும் எதும் சொல்லமாட்டாரு..அதுக்குன்னு கல்யாணசமயத்துல கூடவா இப்படி பண்ணும்.. " என்று அலுத்து கொள்ள..அம்ரூ மெல்ல காதறுகில் ..இதுக்கு ஏன் டென்ஷன் அவருக்கு இன்னிக்கு ஆப்ரேஷன் இருக்குள்ள இன்னும் அதுக்கு ஏதாவது வேலையிருக்கும் முடிச்சிட்டு வரபோறாரு!! என்று தான் அறிந்தவற்றை கூற.. தீபி சத்தமாக.. என்ன சொல்லுறீங்க !!அண்ணா ஹாஸ்பிடல இருங்களா !!என்று கேட்க அனைவரின் கவனமும் இவர்களிடையே திரும்பியது.
மது அத்தை தீபியிடம் ,"ராம் ஹாஸ்பிடலதான் இருக்கானா!!!"என்று வினவ சுருக்கிய புருவத்துடன் தீபி அம்ரூவிடம் திரும்பினாள். செய்வதறியாது திகைத்த அம்ரூ கைகளை பிசையை.. சட்டென்று நினைவு வந்தவராய் வேணு தாத்தா அம்ரூவிடம்,"அம்ரூமா...ராம் எங்க போறேனு சொல்லிட்டு போனான என்று இதமாக கேட்க,சற்று தயங்கிய அம்ரூ..'பேசமா சும்மாவே இருந்திருக்கலாம் இப்படி மாட்டி விட்டாளே!! ' என்று எண்ணியவாறு,"நேத்தி சாயந்திரம் போகும்போது சொன்னாரு தாத்தா ,இன்னிக்கு அவருக்கு ஒரு ஆப்ரேஷன் இருக்குன்னு அவ்வளவு தான்" என்றாள். அனைவரின் முகம்களிலும் சிறு மாற்றம் தெரிய பத்துமாமா சட்டேன்று ,"ஆமாம் அப்பா.., நான் விசாரிச்சுட்டேன் , இன்னிக்கு ஒரு ஆப்பரேஷன் பண்ணிருக்கான்.... ஆனா அதுக்கு அப்பறம் ஆளை காணோம்.. அங்கையும் பார்த்தாச்சு!!" என்று கூற,மது அத்தை,"இந்த ராம் பண்ணறதெல்லாம் சரியே இல்ல .. வீட்ல வேற ஆளா இல்ல!! வேற யாருக்கிட்டையாது சொல்லிருக்க கூடாதா .. காலையிலிருந்து தேடறோமே அப்பவே சொல்லகூடாதா அவன் ஹாஸ்பிடல் போனானு" என்று கடுகடுக்க .. அம்ரூவின் முகம் வாடியது.அவன் அங்கையும் தான் இல்லையே... அப்புறம் என்ன விடு!! என்று வேணு தாத்தா கூற சலித்த முகத்துடன் திரும்பினார் மது.ஸ்ருதி பாப்பாவும் பரத்தும் வெளியிலிருந்து ஓடிவந்து ராம் மாமா வந்தாச்சு... ராம் மாமா வந்தாச்சு... என்று கூச்சலிட அனைவரும் வாசலையே உற்ற நோக்க சீறிபாயும் புலியை போலே உள்நுழைந்தான் ராமன், பின்னாடியே கிரணும் முகிலும் வர, வந்தவன் யாரையும் கவனியாது மேலே செல்ல முற்பட.. மஞ்சு பாட்டியின் கூரலுக்கு நின்றான்.
எங்கப்பா..?! போன ஆளையே காணோம் என்று வினவ .. கடுத்த கூரலில்," பாட்டி ... என்ன வேணும் அதை மட்டும் சொல்லுங்க" என்று கோபதோரணையில் நிற்பதை கண்டு சற்று தயங்கிய பாட்டி வேணு தாத்தாவை நோக்க ,சட்டென்று மது அத்தை," ஏன்ப்பா... கோபமா பேசற ..இப்போ பாட்டி என்ன கேட்டாங்க ...கல்யாண பண்ணிக்க போறீயே அந்த பொறுப்போட தான் பேசறியா.. நாளைக்கு கல்யாணகால் வைக்கனும் பொண்ணு வீட்டு காரங்களுக்கு அழைப்பு சொல்லியாச்சு... எவ்வளவு வேலையிருக்கு நீ கவலையே இல்லம பேசற !!!"என்று முடித்த மாத்திரத்தில்..," நீங்க பாத்தீங்களா... நான் கவலையில்லாம இருக்கேனு... அப்புறம் கல்யாணம் நான் எனக்காக பண்ணிக்கலை நீங்க எல்லாம் வற்புறுத்தலால செஞ்சிக்கூறேன்.. என்ன பண்ணுன்னு எனக்கு தெரியும் !!என்று கர்ஜித்தை கண்டு அனைவரும் ஆடி போயினர் அம்ரூ உட்பட.சொல்லியவன் நிற்காமல் மேலேறி செல்ல சிறிது சலசலப்புடன் அனைவரும் களைந்து சென்றனர்.தன் அறைக்கு சென்ற அம்ரூவிற்கு ராமின் நினைவாகவே இருக்க சற்று தையிரியத்தை வரவழைத்து கொண்டு ராமை தேடி சென்றாள்.அவன் அறையில் இல்லாததால்... சற்று காலார நடந்தபடி தோட்டத்திற்கு சென்றாள்.அங்கே ராம் இவள் வழக்கமாக அமர்ந்திருக்கும் கல்லில் அமர்ந்திருப்பதை கண்டவள்.. தயங்கத்துடன் அருகில் சென்றாள். இவளை கண்டதும் ராமனின் பார்வையில் மாற்றங்கள்... மெல்ல அருகில் சென்றவள்... இங்க உட்காரலாமா!! என்று கேட்க நகர்ந்து உட்கார்தான். சற்று நேரம் நிலவிய நிசப்பதம் ,அம்ரூ திரும்பி அவனை நோக்க உள்ளே புலியென சீறியவன் கண்களில் நீர் ததும்பி நிற்க .. பதட்டத்துடன் அம்ரூ அவன்மேல் கைவைத்தாள். "என்னாச்சி.. ?!ஏன் ஒருமாதிரி இருக்கீங்க!! என்று கேட்டமாத்திரத்தில்
அவளை திரும்பி பார்த்தவன் சட்டென்று அவள் மடியில் தலை கவீழ்த்து தேம்பி அழ ஆரம்பித்தான். என்ன செய்வதென்று புரியாத விழித்த அம்ரூ முதலில் தயங்கியவள் சிறிது நேரத்தில் அழுதவனின் தலையை மெல்ல வருடியாவறு... "ஒன்னுமில்லை ...ஒன்னுமில்லை.. சரி சரி.. "என்று தேற்ற ஆரம்பித்தாள். சிறிது நேர தேற்றலுக்கு பின் ராமன் மௌனமாக படுத்திருந்தான். தட்டி கொடுத்தவாறு அமர்ந்திருந்தாள் அம்ரூ.அவனே மெல்ல வாய் மலர்ந்தான்,"அம்ரூ நான் எவ்வளவோ .. கட்டுபடுத்தி இருந்தேன் தெரியுமா!! ..உன்னை பார்த்தும் என்னால முடியலை " என்றவனிடம் ,"சரி இப்போ சொல்லுங்க என்னாச்சு ?!ஏன் !! இப்படி அழுதீங்க" என்றாள். அவள் கையை எடுத்து அவன் காதை பொத்தியவாறு அழுத்தி பிடித்தவன் கண்களை இருக்க மூடினான்!!.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now