தேடல்-9

304 20 2
                                    

          வட்ட முகம் ,தளர்ந்த உடல், சக்கர நாற்காலியில் வெள்ளை ஜிப்பா அணிந்திருந்த முதியவர் கம்பீர குரலில் ஏன் வச்சி கூடாது? என்று கேட்க திடுக்கிட்டு திரும்பிய இருவரும் அவரை கண்டதும் அதிர்ந்து எழுந்தார் சுப்பண்ணா,"ஐயா!! "என்று அலறியபடி.

சுப்பு!! யாரு இவங்க ஏன் இங்க உட்காந்து இவங்களுக்கு வீட்டல இருக்கிறவங்க பத்தி சொல்லிட்டு இருக்க என கேட்கவும் அதிர்ந்து போனார் சுப்பண்ணா.
ஐயா வந்து.. வந்து.. என்று அவர் இழுக்க அதற்குள் அங்கு வந்து சேர்ந்தான் ராமன். பேச்சு கொஞ்சம் வேகமாய் இருப்பதை பார்த்தவன்,வேகமாய் அருகில் வந்தான்."தாத்தா .."என்ற அழைப்பில் திசை திரும்பிய தாத்தா,"இங்க இருக்கீங்களா உங்களா சாப்பிட பாட்டி உள்ளே தேடிட்டு இருக்காங்க என்று கூறவும் "வாப்பா.. காற்று கொஞ்சம் இதமாக இருக்க அதான் தோட்டத்து பக்கமா வந்தேன் என்று பதில் கூறினார்",சக்கர நாற்காலை தானே திருப்பியவர் சற்று தணிந்த கூரலில் சுப்பு, கேட்துக்கு பதிலே சொல்லை என்றார்.

தலையை தடவி கொண்டே பாவமாக ராமை பார்த்த சுப்பு ,உடனே ராம் ,என்ன தாத்தா ?என்றான். யாருப்பா இவங்க இந்த காலையில் சுப்பு இவங்க கிட்ட நம்ம குடும்பத்தை பத்தி விளக்கிட்டு இருக்கான்,
யாருன்னு கேட்ட பாரு எப்படி நிற்கிறான் என கூறினார். சிரித்து கொண்டே அவ்வளவு தான தாத்தா இவங்க கிரணோட விருந்தாளி என் கல்யாணத்துக்காக வந்துருக்காங்க,பெயர் அமிர்தா என்று அறிமுகபடுத்தினான்.

இவ்வளவு நேரம் திருதிருவென விழித்து கொண்டிருந்த அமிர்தா சற்று புன்னகையுடன் கைகூப்பி வணக்கம் செய்தாள். தலை அசைத்தபடி அவளை அருகில் வரும்படி கை அசைத்தார்.ராமை பார்த்தவள், அவனும் தலை அசைக்கவும் பயந்தபடி தாத்தா அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தாள். தன் கைகளால் திருஷ்டி எடுத்த தாத்தா,அமிர்தா வாம்மா நீ?இந்த பெயர் வச்சவங்களுக்கே உள்ள கலை மா..எவ்வளவு பிரகாசமா இருக்கு முகம் ,எந்த ஊரு மா ?என்றார் புன்னகை பூத்த முகத்துடன்.

"பாண்டிச்சேரி " தாத்தா, என்றாள்.
அட நம்ம பக்கமா..சரி சரி பாட்டி தேடுவா.. வா அப்புறம் பேசிக்கலாம் என்று நகர சுப்பு அவர் நாற்காலியை தள்ளியபடியே பின் சென்றார். அவர் இருவர் நகர அம்ரூவும் பின் செல்ல திரும்பினாள்,மறுபடி அவளது கரங்களை பற்றி தடுத்து நிறுத்தியவன், "உள்ளே எவ்வளவு கலவரம் நடக்குது நீ இங்க வந்து சுப்பண்ணா கிட்ட கதை பேசிக்கிட்டு இருக்க " என வினவ கையை உதறியவள் தடதடவென உள்ளே ஒடினாள். சிரித்தபடிய பின் சென்றான் ராம்.

உள்ளே அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது,அந்த பெரிய மேஜையில் முக்கால் உணவு தமிழ்நாட்டு உணவு வகைகளே இடபெற்று இருந்தன. அம்ரூ தயங்கி தயங்கி உள்ளே வர,அட தயங்காம வந்து உட்காருமா என்று தாத்தா கூரல் குடுக்க அவள் தயக்கமாக நிற்க ,மஞ்சு நீ போயி அமிர்தாவ உட்கார வச்சி பரிமாறு என்று கூற பாட்டி நிமிர்ந்த அமிர்தாவை பார்த்தார்.அட இந்த பொண்ணுதான ராம் சொன்னா நான் பார்த்துக்குறேன்,நீங்க சாப்பிடுங்க என்று தாத்தாவுக்கு இட்லியை எடுத்து வைத்தார். அவளை அழைத்து உட்கார வைத்து பாரிமாற ஆரம்பித்தார் மஞ்சு பாட்டி.பின் ஒருவர் ஒருவராக வந்து அமர ஆரம்பிக்க அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது. சுப்புண்ணா கூறிய விவரத்தில் சிலரை ஊகித்து கொண்டாள் அம்ரூ.இம்முறை சீதா பாட்டி இவளை கண்டு கொள்ளாமல் தாத்தாவிடம் சுவரசியமாக பேசி கொண்டிருந்தார்.
    
    என்ன அண்ணா என்ன பண்ணுமுன்னு சொல்லுங்க என சீதா பாட்டி கேட்க என்னைய என்னமா கேட்குற பெண்கள் எல்லாம் முடிவு பண்ணிருப்பீங்களே என்று மேகநாதனை பார்த்து கண்சிமிட்டனார்.

தாமதமாக வந்த கிரண் அம்ரூ பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் போனில் பேசிக் கொண்டே அம்ரூவை பார்த்து சைகை செய்தான்,ஆவலாக அவனையே பார்த்து கொண்டிந்தாள் அம்ரூ.தீடீரன்று பின்வந்த தீபிகா அம்ரூ கண்களை பொத்தியபடி  "அண்ணி நான் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்". என கூற அனைவரும் அதிர்ந்து திரும்பினர்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now