தேடல்-54

209 13 2
                                    


அது ஒரு பசுமையான பூஞ்சோலை.., தரையை வெறித்தபடி அமர்ந்திருவனிடம் பேசவும் முடியாமல், தனியே விட்டு செல்லவும் முடியாமல் சற்று இடைவெளியில் பின்பக்கமாக அமர்ந்திருந்தான் கிரண்.

இதமான தென்றல் தடவி செல்ல ராமனுக்கு அவனின் அம்மூவின் நினைவுகள் தடவி சென்றன.

சிலநேரம் சென்றபின் கிரணின் இருப்பை உணர்ந்த ராமன் அவனின் அருகில் சென்று அமர்ந்தான்.

ராம்,"எனக்கு நல்லா தெரியும் டா... கிரண்!! எவ்வளவுவோ யோசிச்சி பார்த்துட்டேன் டா..,நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனோன்னு யோசிச்சேன்!!,ஆனா அவ பொய் சொல்லுறா!! பல தடவ அவ கண்ணுல நான் பார்த்துருக்கேன்!!நீயே சொல்லு எவ்வளவு பேர் இருந்தோம், எல்லாருக்கிட்டையும் போய் அவ பேசிட்டு..!! சண்டை போடுட்டு இருந்தாளா!! என்னைய தேடி தேடி அவளாவே வந்தா...!! அவ்வளளோ ஏன் நீ தான அவளுக்கு கிளோஸ் ,ஆனா உன்னையை அவ கிட்ட விட்டுருக்காளா!!...,உன் மேல அவளுக்கு ஒரு அக்கறையை பார்த்துருக்கேன் ...,ஆனா என்மேல அவளுக்கு இருந்த அந்த காதலை நான் பீல் பண்ணிருக்கேன். நான் அவ மடியில படுக்கும் போதெல்லாம் அம்மா மடியில படுத்தமாறி இருக்கும் ...!! , அப்போலாம் அவளுக்கும் எனக்கும் நடுவுல இருந்த அந்த ஒரு பீல் எனக்கு பொய்ன்னு நினைக்கவே முடியலை !!,எனக்கு என்னமோ ஏதோ அவ என்கிட்ட மறைக்கிறான்னு மட்டும் நல்லா தெரியுது ரா!!.

கிரண்,"ராம் ...எனக்கு உன்னைய பார்த்தாலே தெரியுது!!,நீ அமிர்தாவ எவ்வளவு நேசிக்குறனு!! , நான் உன்னை இப்படி பார்ப்பேன்னு நினைச்சு பார்த்ததே இல்லே!! அவ்வளவு ஒரு காதல் !!,அப்படி ஒரு ஏக்கம் தெரியுது உன் கண்ணுல!!, நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை!!உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை செய்!! நான் கூடவே தான் இருப்பேன்!!"

இதனை கேட்ட ராமன் மகிழ்ச்சி வெள்ளத்தில் கிரணை இழுத்து அணைத்து கொண்டான்.

கிரண்,"சரி... சரி !! அடுத்து என்ன பண்ணலானு யோசி !!" என்று ஆனந்த கடலில் திளைத்து போனான் கிரண்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now