தேடல்-16

310 18 4
                                    

எல்லாம் ஏறியாச்சா?!!கிளம்பலாமா!!நல்ல நேரத்துல கிளம்பனுமுன்னு ஏன் நேரமாக்கிறீங்க!! மழை வேற வரமாதிரி இருக்கு!! என்று குரல் கொடுத்தார் மேகநாதன்.
நான் ரேனுவையும் ராமையும் மேல அனுப்பிருக்கேன் டா..இதோ வந்துடுவாங்க என்றாள் சீதா பாட்டி.
ஏம்மா இப்போ அனுப்பினீங்க !!?என்றார் மேகா மாமா. ராமுக்கு ஆரத்தி எடுக்கனும் இல்லப்பா.. என்றார் மஞ்சு பாட்டி.அதற்குள் ரேனும்,ராமும் இறங்கி வர பின்னிருந்து அவங்க வந்துட்டாங்க கிளம்பலாம் என்றார் மோகன்மாமா.
அவர்கள் வண்டியில் ஏற வர்ஷா எழுந்து... கிரண் மாமா இன்னும் வரலையே என்றாள்.அவன் எங்கே போனான் இப்ப?!என்றார் மது அத்தை.
பானு!! கிரண் எங்க ?!என்று மேகாமாமா கேட்க அவர் விழித்து கொண்டே அங்கும் இங்கும் எட்டி பார்க்க..அதற்குள் ரேனு,"பாப்பா ..வந்துட்டா இல்லம்மா? "என்று மதுவை பார்த்து கேட்க, அப்போது தான் குழந்தை நினைவு வந்தவளாய்.. என்கிட்ட பரத்தை மட்டும் தான விட்டுட்டு போன.. பாப்பா உன்கிட்ட இருக்கான்னு நான் நினைச்சிட்டு இருக்கேன் என்றார். அம்மா!! அந்த பொண்ணு அமிர்தா ஏறிட்டளா!, அவகிட்ட தான் பாப்பாவை குடுத்துட்டு போனேன் என்றாள் ரேனு எல்லாம் திரும்பி தேட, "அவங்க இன்னும் ஏறவேயில்லை" என்று தீபி பதில் கொடுக்க ராமனின் புருவங்கள் சுருங்கியது. அந்த பொண்ணு எங்க போன!!நீ ஏன்டி அவகிட்டலாம் கொடுத்துட்டு போன என மது கடுகடுக்க.. ராமனுக்கு உச்சியில் ஏறியது. நான் வர்ஷா வ தான்ம்மா பார்த்துக்க சொன்னேன் அவ முடியாதுன் சொல்லிட்டா... பாப்பாக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு இருந்தாளே!! என்றவளுக்கு நினைவு வர ... கிரணும் கூடதான் ம்மா .. இருந்தான் இரண்டு பேரும் பாப்பா வ குளம் பக்கம் கூட்டிட்டு போய் ஊட்டிவிட சொன்னேன், அங்க தான் இருப்பாங்களோ!!! என்று திரும்பி இறங்க முற்ப்பட... வர்ஷாவிற்கு பொத்து கொண்டு வந்தது.

ரேனுவை தடுத்த ராமன், "நீ இரு !!நான் போய் பார்க்கிறேன்,என்று வெளியேற ,'மணியாகுதே!! அந்த பொண்ணால நேரத்துக்கு போக முடியாது போல' என்று மது அத்தை புலம்ப..திரும்பிய ராம், "தாத்தா நீங்க கிளம்புங்க நான் அவங்க ரெண்டு பேரையும் பாப்பாவையும் காரில கூட்டிட்டு வரேன்" என்றான். அதுவும் சரிதான் மேலே ஏறிபோய் தேடி கூட்டிட்டு வர நேரமாகிடும்.. நீ அவங்களை உன் கார்லியே கூட்டிட்டு வாப்பா!! என்றார் பத்து மாமா.சரி என்று வேணு தாத்தாவும் தலையாட்ட ,வர்ஷா எழுந்து நானும் வரேன் மாமா,ஸ்ருதி அழபோறா!! என்றாள் அக்கறையுடன்.
அதெல்லாம் வேணாம் அதான் இரண்டு மாமா இருக்கானுங்கள அவங்க பார்த்துப்பானுங்க .. நீ வேற சோர்வா இருப்ப உட்காரு நாம போலாம் வண்டி எடுங்க!! என்றார் மது அத்தை.வண்டி நகர ராமன் பெருமுச்சுடன் வேகமாக படி ஏற ஆரம்பித்தான்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now