தேடல் -36

259 14 3
                                    

                  இதயம் படபடக்க!!! ... மனம் கணகணக்க!!...நினைவலைகள் கண்ட விதத்தில் இழுத்து செல்ல.. அவனின் அந்த வார்த்தை அவளை துளைத்து எடுத்தது.. "உறுதிப்படுத்திட்டேன்..." அப்படின்னா.. அவரோட வாழ்க்கையில முன்னாடியே வேற பொண்ணு இருந்திருக்கா.... அவளுக்கு ஏற்பட்ட உணர்வுகளும்.. காலையில் அவளின் செயல்களும் அவளை நிலைகுலைய செய்தது.

          அவளின் நினைவலைகளை இழுத்து கொண்டு வருவதற்கென அவன் கைவிரலை சுண்டிவிட..! , நினைவுலகம் வந்தவள் அடுத்து என்ன நடந்திருக்கும் !!?என்ற ஆர்வத்தைவிட யார் அந்த பொண்ணு!? ..ஏன் இப்படி பண்ணாரு?! என்கிற கேள்விதான் இருக்க...,
     
     நீங்க விரும்புறீங்கனு தெரிஞ்சுமா..!! அவர் அப்படி பண்ணாரு ?!!என்று கேட்டும் விட்டாள்.
   

               என்ன அம்ரூ நீங்க முழுசா கேட்கமா...கேள்வியா கேட்கறீங்க..!!! என்றவனிடம், சரி!!சரி!!...நான்எதும் கேட்ல.. நீங்க சொல்லுங்க... என்றாள்.

   அதுக்கு அப்புறம் எனக்கு அவன்மேல கோவமா வந்தது.. அப்போ இன்னொரு விஷயமும் தெரிஞ்சிது...எங்க வீட்ல நடந்த விஷயம்..... ஹாஸ்பிடல ஏதோ பிரச்சனை.. அதோடு நஷ்டம் வேற போல..அப்போ... ராம் ஐடியவ வச்சி எதோ பண்ணிருக்காங்க.. நல்லா வந்துருக்கு.. அதனால ராம் பெருல அத பண்ணுன்னு தாத்தா சொல்ல எல்லாருக்கும் சரிதான்.. என் அத்தை வந்து கிளப்பி விடரவரியும்..அந்த சமயம் எங்கம்மா..சீதா பாட்டி ..அத்தை அப்பப்போ கீதா சித்தி ன்னு எல்லாம் அவனை டார்கெட் பண்ணிருக்காங்க... முதல அவன் என்கிட்டையும் சொல்ல.. நானும் கவனிக்கலை.. அப்புறமா.. எனக்கு தெரிஞ்ச,அப்புறம் அவன் மேல இருந்த கோபத்துல நான் வேணுன்னே கண்டுக்காம போனே...அதும் அவனுக்கு தெரியும்.

      எனக்கு ஆர்வம் தாங்காம நான் மாதுட்ட போயி கேட்டும் செஞ்சேன். அவ எனக்கு ஆமான்னும் சொல்லலை, இல்லனும் சொல்லலை...,எனக்கு கோபம் அதிகமாகிடுச்சி அவனைவிட்டு விலக ஆரம்பிச்சேன் எல்லாமும் அவனுக்கு தெரியும்..ஆனா அவன் என்னானு என்னைய கேட்கலயே .. அடுத்த வருஷம் ஆச்சு, நான் மாதவிகிட்ட பேசரதை விட்டுட்டேன்... ஆனா அவ ராம் பின்னாடியே போரத நிறைய தடவ பார்த்தேன். அப்படி ஒருநாள் நானும் ,அவனும் தனியா கிளாஸ்ல இருக்க.. அவன்கிட்ட நான் மாது பேச்சை ஆரம்பிக்கும் போதே....,"அவ உனக்கு சரி கிடையாது டா விட்டுவிடுனு அவன் சொல்ல".. ,கோபத்துல அப்போ உனக்கு ரொம்ப சரியான ஆளோ...நீ இப்படி பண்ணுவனு நான் நினைக்கலடா.... இப்படி ஏமாத்திட்டல..என்னையனு... அவனை பேச விடமா திட்டனேன்... இப்ப வரையும் எனக்கு உறுத்திட்டு இருக்குது அவனுக்கு கோபம் வருனு தெரிஞ்சும் நான் அமிர்தாம்மா பத்தி பேசனேன், அமிர்தம்மா..இருந்திருந்தா.. நீ பண்ற வேலைய பாத்துட்டு ரொம்ப பெருமை பட்டுரூப்பாங்க.... நல்லவேளை இல்ல.. ",
      
           அவ்வளவு நேரம் பொறுமையா இருந்தவன் இதை கேட்டதும் என்னைய அடிச்சிட்டான் பதிலுக்கு நான்...நல்ல சண்டை ..மத்த பிரண்டஸ் வந்து விலக்க...கோபமா போயிட்டான்.என்னால அன்னிக்கு நடந்தது மறக்கவே முடியாது.. எனக்கு அவன் மேலயும் மாது மேலயும் கோபம்..வெளிவந்த நான்.. கார்ல மாதுவ பாத்துட்டு துரத்திட்டே போனேன் ..வேகமாக...கண்மூடி திறக்கறதுக்குள்ள ரோட்ல கடந்தேன்...அதான் தெரியும்!!.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now