தேடல் -27

285 17 3
                                    

         நேற்று சிங்கமென கர்ஜித்தவன், இன்று பதுங்கி பதுங்கி  பூனையை போல் வாசல் நுழைய,"அதோ மாப்பிள்ளையே வந்துட்டாரே!!, ஐயரே நீங்க ஆரம்பிங்க!!" என்று பல்லவியின் தந்தை அறிவிக்க அனைவரும் அவன் வந்த மகிழ்ச்சியில் வேலைகளை பரபரவென ஆரம்பித்தனர்.

வெகுளிபோல் சிரித்தவன் கையை தீபி சென்று இழுத்து வர,சற்று கோபத்தை கட்டுபடுத்தியவாறு சீதா பாட்டி ,"என்னப்பா நேரம் ஆகுதுல இவ்வளவு நேரம் வளத்திட்டியே... நாங்கலெல்லாம் டென்ஷன் ஆகிட்டோம்ப்பா!!" என்றார் அசடுவழிய

"பாட்டி!! கோவில கும்பல் ஜாஸ்தியா இருத்துச்சி அதான் தாமதம்,இப்போ ஆரம்பிச்சிடுங்க" என்றான் வாய்நிறைய. ஐயர் பூஜை செய்ய ஆரம்பிக்க சட்டென நினைவு வந்தவர்கள்,இப்போ வேணு தாத்தா எங்க என தேட ஆரம்பிக்க,"நான் இங்க தான் இருக்கேன் நீங்க தொடங்குங்க  ஐயரே!!" என்று வந்தவர் ராமை வெறித்து பார்த்தார்.அவரின் பார்வையை புரிந்தவன் மெல்ல புன்னகையிட்டபடி பூஜையை செய்ய  இப்போது மனம் முழுதும் அவன் அம்முவை தேடியபடியே இருந்தது.பூஜை முடியும் வேளை வந்து நின்றாள் அம்ரூ. அனைவரும் கால்பிடித்து நட ராமனின் கவனம் அம்ரூவின் முகத்தில் தென்பட்ட நவரசத்திலேயே லயித்திருந்தது.

கூட்டத்தோடு நின்றிருந்தவளிடம் மெல்ல வந்த கிரண் சைகை செய்ய அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
இவளேயே கவனித்திருந்தவன் ,"நாம சொன்னா மட்டும் இவளுக்கு ஒன்னும் புரியாது..அவன் கூப்பிட்ட மட்டும் போறாத பாரு" என்று எண்ணியபடியே நின்றிருந்தான்.
இவர்கள் இருவர் நகர்ந்து செல்வதை வேணு தாத்தாவும் நோக்க பல குழப்பங்களுடன் அமர்ந்திருந்தார்.

அம்ரு,"கிரண் ...என்னாச்சு ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?".
"அமிர்தா.. நான் சொல்லுறத பொறுமையா கேளுங்க?!.. நேத்தே வரசொல்லி போலீஸ் ஸ்டெஷன் ல சொன்னாங்க..நேத்தி நடந்த டென்ஷன் ..உங்களுக்கு தெரியுமே அதனால போக முடியல..இப்போ தான் கிளம்பலானு இருக்கேன்.."என்று இழுக்க...ஆர்வம் தாங்காமல் அம்ரூ,"அப்போ கிடைச்சிருச்ச கிரண்...நானும் வரேன் ..என்னையும்
கூட்டிட்டு போறீங்களா!!!.." என்று படபடத்தாள்.

இராமன் தேடிய கண்கள்Where stories live. Discover now